தனது விநோத சிரிப்புகாகவே திரையில் கவனிக்கப்படுபவர் நடிகர் மதன் பாப். ரஜினி, கமல், உட்பட பல முன்னனி நடிகர்களுடன் ஸ்க்ரீன் ஸ்பேசைப் பகிர்ந்திருக்கிறார். அண்மையில் சாய் வித் சித்ரா நிகழ்வில் பேசிய அவர் சக நடிகர்கள் பற்றியும் தனது அரசியல் ஆர்வம் குறித்தும் மனம் திறந்துள்ளார். 



அதிலிருந்து, “சூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரும் இருக்கும்போது ரஜினி ஒருமுறை என்னிடம் வந்து பேசினார். என்னிடம் பேசவேண்டிய அவசியமே இல்லை. ஆனால் அருகில் வந்து, ’என்னைப் பற்றி என்ன நினைக்கறீங்கனு கேட்டார். நீங்க ரொம்ப டேக்ட்ஃபுல்லான மனிதர் என்று சொன்னேன். அவர் நினைச்சால் என்னைப் பார்க்கலாம். ஆனால் நான் நினைச்சால் அவராக மனது வைத்தால்தான் என்னைச் சந்திக்க முடியும். அதைத்தான் அப்படிச் சொன்னேன். சினிமாவில் எல்லோரும் பெரிய ஆளாகி விட முடியாது. ஐந்து சதவிகிதம்தான் நமக்கான நேரத்துக்கு அதில் பங்கு இருக்கு.மீதம் 95 சதவிகிதம் நாம் எப்படியான மனிதர் என்பதைப் பொறுத்துதான்.அவர் அப்படியானவர்’” என்றார். 


மேலும், ‘அரசியலில் எனக்கு நுழைய ஆர்வம் இல்லை. என்றாலும் அரசியல்வாதிகள் பலர் எனக்கு நண்பர்கள். என் பிள்ளையின் திருமணத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தன் கைப்பட கடிதம் எழுதி அனுப்பியிருந்தார். அவரது வீட்டுக்கு என் பிள்ளைகளைச் சாப்பிட அழைத்தார். ஆனால் ஹனிமூன் காரணமாக இவர்களால் போக முடியவில்லை. தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் எனக்கு நெருங்கிய நண்பர்’ எனத் தனக்கும் அரசியலுக்குமான தொடர்பு குறித்து அவர் பகிர்ந்து கொண்டார்.


இதற்கிடையே  ஃபிரண்ட்ஸ் படத்தில் இடம்பெற்ற நேசமணி காமெடியில்  வடிவேலுவுடன் நடித்த மதன் பாப் . அந்த காமெடி எப்படி எடுக்கப்பட்டது என்பது குறித்து பகிர்ந்திருக்கிறார்.


 ”இதோ வந்துட்டேன்னு ஓடி வரும் பொழுது ராதாரவி கிடையாது. நான் வழுக்கி விழும்பொழுது  நான் மட்டும்தான் இருந்தேன். அடுத்து நான் எட்டி உதைக்கும் பொழுது என் கால் மட்டும் வேறு ஒருத்தர் மேல போய் படும். அவர் கரி டிரம்மில் போய் விழும் பொழுது  அவர் கூட உள்ளவங்க இருந்துருப்பாங்க. அதன் பிறகு  விஜய் , சூர்யா , ரமேஷ் கண்ணா சிரிக்கும் பொழுது அவங்க தனியா சிரிப்பாங்க. தேவையானி தனியா சிரிப்பாங்க. நான் தனியா சிரிப்பேன். ராதா ரவி தனியா சிரிப்பாங்க. எல்லா காட்சிகளையும் இப்படி  தனித்தனியா எடுத்துதான் ஜாயின் பண்ணாங்க. ரொம்ப பேரு சீரியஸ் சீன் எல்லாம் பயங்கரமா எடுப்பாங்க. காமெடி சீனை ரொம்ப அலட்சியம் செய்வாங்க. காமடிதானே அப்படினு. ஆனால் காமெடி சீனையும் சீரியஸா , நுணுக்கமா எடுத்தா ஹிட் ஆகும் என்பதற்கு இந்த நேசமணி காமெடி ஒரு உதாரணம் .  நேசமணிக்காக இத்தனை கோடி பேர் வேண்டிக்கொண்டதில் இருந்து அதன் வெற்றி தெரியுதில்லையா. வடிவேலு அந்த சீன்ல எண்ணையில வழுக்கி விழுந்த மாதிரியாக காட்சி இருக்கு. அப்போ அவர் கால் அடிப்பட்டுருந்துச்சு. வின்னர் படத்தில் வடிவேலு நொண்டி நடப்பது போல இருக்குமல்லவா அப்போது அவருக்கு உண்மையிலேயே காலில் அடிப்பட்டுருந்தது. மதுரையில் அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.  ஜார்லி சாப்ளின் , ஜாக்கி சான் போன்றவர்கள் காமெடியை நுணுக்கமாக எடுப்பார்கள். அதே போல இயக்குநர் சித்திக் இந்த காமெடியை ஆறு நாட்கள் எடுத்தாரு. அதுதான் அதன் வெற்றிக்கு காரணம். நான் அந்த சீன்ல நிறைய நேரம் சிரிச்சேன் . அதை முழுசா போட முடியல. ஏன்னா நீங்க சிரித்ததை வைத்தால் மற்றவர்களின் சிரிப்பு எடுபடவில்லை. அதனால் உங்களின் சிரிப்பை பாதி கட் செய்துவிட்டேன் அப்படினு கால் பண்ணி சொன்னார் சித்திக். வடிவேலு அவர்களுடன் நிறைய படங்கள் நடித்திருக்கிறேன். ரொம்ப ஜாலியா இருக்கும் . அசத்த போவது யாருனு நான் ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தேன். அதில் வடிவேலுவை போலவே இருவர் இருப்பாங்க. அவங்க பண்ணும் காமெடியை பார்த்துவிட்டு இரவு 10 மணிக்கு கால் செய்து , யாருண்ணே அவங்க நல்லா பண்ணுறாங்க அப்படினு பாராட்டியிருக்காரு.” என்றார் மதன் பாப்