தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஸ்ரீஜா பரம்பரை நகையை திருடி கொண்டு போய் தினேஷிடம் கொடுத்து விட்டு வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் . ஸ்ரீஜா வீட்டுக்கு வரும்போது அங்கே போலீஸ் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். என்ன விஷயம் என்று விசாரிக்க, நகை திருடு போன விஷயம் பற்றி சொல்ல எப்படி தப்பிப்பது என யோசிக்கிறாள்.
மறுபக்கம் பரம்பரை நகையை வாங்கிய தினேஷ் ஒரு அடகு கடைக்குச் சென்று அவரிடம் நகையை கொடுத்து பத்து லட்சம் ரூபாய் பணத்தை கேட்டு வாங்கி வருகிறார். அதன் பிறகு மீண்டும் அங்கு வரும் ஸ்ரீஜா நகையைக் கேட்க, அவர்கள் அடகு வைத்து விட்டதாக சொல்ல உடனடியாக அந்த நகை தேவைப்படுகிறது என சொல்கிறாள்.
பிறகு தினேஷ் “அடகு வச்ச சீட்டு இருக்கு. இங்க போய் பணத்தை கொடுத்துட்டு நகையை மீட்டுக்கோங்க” என்று சொல்ல வேறு வழியில்லாமல் அந்த சீட்டை வாங்கிக் கொண்டு செல்கிறாள்.
அடுத்து ஆபீஸில் அரவிந்த் தாரா மற்றும் ஸ்ரீஜா ஆகியோர் எப்படியாவது சரக்கு பிசினஸ் டீலை முடிக்க வேண்டும் என பிளான் போட்டுக் கொண்டிருக்கின்றனர். நாளைக்கு மீட்டிங் வச்சுக்கலாம் என்று பேச அதைக்கேட்கும் அப்துல் சூர்யா மற்றும் மாரியிடம் இந்த விஷயத்தை சொல்ல இருவரும் “நாளைக்கு மீட்டிங் நடப்பதற்கு முன்பாக போய் அந்த டாக்குமெண்ட்டை எடுத்துவிடலாம்” என்று பிளான் போடுகின்றனர்.
மறுநாள் காலையில் மாறி மற்றும் சூர்யா ஆபீஸூக்கு வர, மாரி வெளியில் காத்திருக்க, சூர்யா பின்பக்க வழியாக உள்ளே வந்து டாக்குமெண்ட்டை தேட தொடங்குகிறான். இது மாரி மற்றும் சூர்யாவை மடக்கிப் பிடிக்க தாரா டீம் திட்டம் எனத் தெரிய வருகிறது.
அடுத்ததாக மாரிக்கு எதிரே சென்று ஒருவன் இன்ஸ்பெக்டர் விக்ரமுக்கு ஹார்ட் அட்டாக் என்று சொல்லி பேச, அவள் உண்மை என நினைத்து விக்ரம் வீட்டிற்கு ஓடி வருகிறாள். அங்கே ரவுடிகள் சிலர் மாரியை கடத்தி விடுகின்றனர். இப்படியான நிலையில் இன்றைய மாரி சீரியல் நிறைவடைகிறது.
மேலும் படிக்க
காஞ்சிபுரத்தில் நாளை தனியார் பள்ளி, கல்லூரிகள் இயங்கக்கூடாது: ஆட்சியர் உத்தரவு