மாரி சீரியலில் சூர்யா மரணிப்பது போல கனவு வருவதை கண்டு மாரி திடுக்கிட்டு எழும் காட்சிகள் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாகிறது.
தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இன்றைய எபிசோடில்மாரியும் சூர்யாவும் காரில் போய்க் கொண்டிருக்க மாயமாக மறைந்த பெண் சொன்னது மட்டும் ஞாபகத்தில் வந்து போகிறது.
உன் புருஷன் உயிருக்கு மல்லி பூவால் ஆபத்து என்பது சொல் நினைவில் வந்து கொண்டே இருக்கிறது. அப்போது ஒரு வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடக்க தாய்மாமனும் குழந்தையும் குழந்தையின் அம்மா போட்டோ முன்பு விளக்கேற்றி சாமி கும்பிடுகின்றனர்
அடுத்து சூர்யாவும் மாரியும் அந்த பிறந்தநாள் பங்ஷஷனுக்கு வருகிறார்கள். அங்கு கேக் வெட்டப் போகும் குழந்தை அம்மா ஞாபகம் வந்து கேக் வெட்டாமல் இருக்க மாரி பாட்டு பாடி குழந்தை சந்தோஷப்படுத்துகிறாள். அப்போது அந்த குழந்தை தன் அம்மாவை காண்பிப்பதாக சொல்லி மாரியை அழைத்துக் கொண்டு சென்று போட்டோவை காட்டுகிறது. இதனை பார்க்கும் மாரிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.
காரணம் அது சிறிது நேரத்திற்கு முன் தன்னை எச்சரித்த பெண் தான் போட்டோவில் இருக்கிறார. இதனையடுத்து மாரி தாய்மாமனிடம் அவரை பற்றி கேட்கிறார். கணவனுக்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட அந்த பெண் தூண்டுதலின் பேரில் கணவன் இவரை கொன்று விட்டதாக சொல்ல மாரி மேலும் அதிர்ச்சியாகிறார்.
பின்னர் வீட்டுக்கு திரும்பும் மாரி ரூமில் தூங்குவதற்கு சென்று விடும் நிலையில், காரில் அந்த ஜிமிக்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடையும் சூர்யா தாராவிடம் நடந்ததை கூறுகிறார். இதனையடுத்து நான் தூக்கி போட்ட ஜிமிக்கி எப்படி வண்டியில போச்சு என்று கேட்க, சங்கரபாண்டியன் நான் தான் தூக்கி போட்டேன் என்று சொல்ல தாரா அவரை அடிக்கிறார்.
பின்னர் தூக்கத்தில் மாரிக்கு கனவு வருகிறது. அந்த கனவில் சூர்யா இறந்து கிடப்பது போல் தெரிய ஒரு பெண் வந்து மல்லிப்பூ வைப்பது போலவும் காட்சிகள் வர அவர் அதிர்ச்சியாகி எழுகிறாள்.