சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மாநாடு திரைப்படத்தின் ஒரு வருட கொண்டாட்டத்தை முன்னிட்டு, மாரத்தான் ஓட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


2021 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் நடிப்பில், பிரபல இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியாகியிருந்த படம், மாநாடு. ட்ரெய்லர் வெளியான புதிதில், “என்னடா படம் இது” என குழம்பிய ரசிகர்கள், படம் வெளியானவுடன் “என்னா படம் டா இது!” என படத்தை ஆஹா ஓஹோ என புகழ்ந்தனர். இப்படம் வெளியாகி நாளை மறுநாளுடன் ஓராண்டு நிறைவடைவதைத் தொடர்ந்து இதனை கொண்டாடும் விதத்தில் பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 




மாநாடு திரைப்படம்:


 மாநாடு திரைப்படத்தில், சிம்புவிற்கு ஜோடியாக மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார். அது மட்டுமன்றி படத்தில் எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திர சேகர், பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.





டைம் லூப்
கான்செப்ட்டை மையமாக வைத்து காமெடி, த்ரில்லர் என அனைத்து அம்சங்களும் இடம் பெற்றிருந்ததால், படம் மாபெரும் ஹிட் அடித்தது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில், மெஹரசைலா பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தில் எழுதப்பட்டிருந்த “தலைவரே தலைவரே..” எனும் டயலாக் கூட, மீம்ஸ் க்ரியேட்டர்களிடையே ட்ரெண்ட் ஆனது. 


மாநாடு படத்தின் ஓராண்டு நிறைவு:


மாஸ் ஹிட் அடித்த மாநாடு திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைவதையொட்டி, அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “நண்பர்கள் மற்றும் ரசிகர்களே, மாநாடு படத்திற்காக அளவற்ற அன்பை காட்டினீர்கள். இப்போது, 1 Year of Maanaadu கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள். இதற்கான மாரத்தான் நவம்பர் 25 ஆம் தேதி நடைபெறுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.


 










மேலும் மாநாடு படத்தின் ஒராண்டு நிறைவை கொண்டாடும் வகையில் காமன் டிபியும் வெளியாகிறது. இதையும், மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியே வெளியிடுவார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.