மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்தின் டைட்டிலை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Continues below advertisement


அதில் படத்தின் பெயர் மாமன்னன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை மாரிசெல்வராஜ் இயக்குவதாகவும் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் இப்படத்தை தயாரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகை குறித்து அப்டேட் வெளிவந்துள்ளது. அதன்படி இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபகத் பாசில் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் முதல் ஆளாக நீண்ட இடைவெளிக்கு பிறகும் களமிறங்கியுள்ள நகைச்சுவை புயல், சிரிப்புகளின் சிகரம் வடிவேலுவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இது அனைவரது மத்தியிலும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 






இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் என்பது கூடுதல் சுவாரஸ்யம்.