ஆஹா என்னும் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வெப் தொடர் இரை. இதில் லீட் ரோலில் சுப்ரீம் ஸ்டார் என கொண்டாடப்படும் சரத்குமார் நடித்திருந்தார். இந்த வெப் தொடரை தூங்காவனம் மற்றும் கடாரம் கொண்டான் படங்களின் இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா இயக்கியுள்ளார்.  இவர் கமல்ஹாசனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் என்ற முக்கியமான கேரக்டரில் சரத்குமார் நடித்துள்ளார் சரத்குமார்.

Continues below advertisement







இரை வெப் தொடரை ராடன் மீடியாஸ் இணைந்து தயாரித்துள்ளது என்பதும் , அது ராதிகா சரத்குமாருக்கு சொந்தமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. வெப் தொடர் குறித்து வெளியீட்டு விழா மேடையில் பேசிய தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார், தன் கணவர் திரைக்கு பின்னால் பட்ட சிரமங்களை பகிர்ந்துள்ளார். அதில் “ கேரக்டர் சூப்பரான கேரக்டர். வேலை செய்ய கூடாதுனு நினைக்குறாரு. ஒரு ரிலாக்‌ஷான வாழ்க்கைக்கு போயாச்சு. பீச் ஹவுஸ்ல பார் வச்சு நடத்திட்டு இருக்காரு . அந்த சமயத்துல வரும் வேலை , குடும்பம் இரண்டையும் பேலன்ஸ் பண்ணுறாரு. இது படத்தின் கதை. ஆனால் உண்மையிலேயே அவருக்கு என்ன பிரச்சனை இருந்ததுனு எனக்குதான் தெரியும். ஏன்னா அந்த டைம்ல , அவருக்கு உடல்நிலை ரொம்ப மோசமா இருந்தது. நானும் ஐதராபாத்தில் இருந்தேன். என்னால வர முடியல. உடனே நான் வேண்டாம் மாமா இந்த ஷூட்டிங் நீங்க தள்ளி வச்சுடுங்கனு சொன்னேன். ஆனா ராஜேஷுக்கு வேற  ஷூட்டிங் போகனும்னு சொல்லுறாங்க. ஆஹா நிறுவனம் இல்லை இல்லை ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ண சொல்லுறாங்க. என்ன பண்ணுறதுனு தெரியலை. சரி என்ன ஆனாலும் பரவாயில்லை , நான் போறேனு சொல்லிதான் அவங்க கொடைக்கானலுக்கு கிளம்பி போனாங்க. நான் வேண்டாம்னு சொல்லியும் கேட்கவே இல்லை. அந்த டைம்ல ஒரு பக்கம் நடிகராகவும் , புரடக்‌ஷனையும்  பார்த்துக்கிட்டாரு. இன்னொரு பக்கம் பூஜாவையும் பார்த்துக்கிட்டாரு. ” என தனது கணவரை பற்றி புகழ்ந்து பேசியிருக்கிறார் ராதிகா சரத்குமார்.