மாமன்னன் படத்தின் வெற்றி விழா இன்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
"நல்ல படத்தை கொண்டு போய் மக்களிடம் சேர்த்ததற்கு நன்றி. மாரி செல்வராஜின் கதைய முழுசா நம்பி முதல் நாள் முதல் எங்கள் வேலையை சரியாக செய்தோம். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’க்குப் பிறகு எனக்கு இவ்வளவு பெரிய ஓப்பனிங். என்னுடைய முதல் படமும் கடைசி படமும் இவ்வளவு பெரிய வெற்றியா அமைஞ்சதா சொல்லி எல்லாரும் செண்ட் ஆஃப் கொடுத்திருக்கிறார்கள்” என கலகலப்பாக பேசத் தொடங்கினார் உதயநிதி.
தொடர்ந்து மாமன்னன் படம் பற்றி பேசிய உதயநிதி ஸ்டாலின், “நாங்கள் முதலில் 510 ஸ்க்ரீன்கள் தான் போட்டோம், இப்போ இரண்டாவது வாரமும் கிட்டத்தட்ட 470 ஸ்க்ரீன்களில் இப்போது படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆறுமுகம், ரெட் ஜெயிண்டின் மேனேஜர். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கார். ரெட் ஜெயிண்டின் நிறைய படங்களில் நடிச்சிருக்கார், ஆனால், என்னை மாதிரியே இந்தப் படத்தில்தான் கொஞ்சம் தனியா தெரிகிறார். பாடலாசிரியர் யுகபாரதிக்கு நன்றி. இது விரைவில் நடத்தப்பட்ட விழானு சொன்னீங்க. கண்டிப்பா 50ஆவது நாள் விழா வச்சு எல்லாருக்கும் ஷீல்ட் தருவோம்.
நான் இது தான் என்னுடைய கடைசி மேடைனு நினைச்சேன். கண்டிப்பா 50ஆவது நாள் நிகழ்ச்சி உண்டு. சேண்டி மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட்டில் சும்மா தான் நிற்பார். அவர் என்ன பண்ணாலும் இயக்குநருக்கு பிடிக்காது.
இந்தப் படம் தொடங்கிய அன்று ஒரே ஒரு போஸ்டர் விட்டோம், அன்றே ஓடிடி முதல் இசை வரை அனைத்தும் விற்றுவிட்டது. போஸ்டர்களை இப்படி பார்த்து பார்த்து செதுக்கினார்கள். மாரி செல்வராஜின் இன்புட். கபிலனுக்கு நன்றி.
கீர்த்திக்கு நன்றி. ஃபஹத் பத்தி நான் சொல்லத் தேவையில்லை. அவர் தேசிய விருது வென்றவர். ரஹ்மான் சாருக்கு நன்றி. கீர்த்தி என்னால் நிறைய காட்சி என்னால ரீடேக் போயிருக்காங்க. மன்னிச்சிக்கோங்க.
லால் சாருக்கு நன்றி. முதலமைச்சர்னு சொன்னதும் யார் நடிப்பாங்கனு நான் பயந்துட்டேன் இருந்தேன். அப்பறம் லால் சார்னு சொன்னாங்க. மாரி செல்வராஜின் குடும்பத்துக்கு நன்றி. நான் எந்த நம்பிக்கையில் என் கடைசி படத்தைப் பண்ண சொல்லி அவர கேட்டுக்கிட்டேனோ, அந்த நம்பிக்கைய நிறைவேத்திக் கொடுத்துட்டாரு. நேற்று வரையிலும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, வெளிநாடு எல்லாம் சேர்த்து இப்படம் 52 கோடி வசூலிச்சிருக்கு. தெலுங்கில் அடுத்த வாரம் ரிலீசாகுது. மாரி செல்வராஜின் உதவி இயக்குநர்கள் எல்லாரும் டைரக்டராவதற்கு முன்னாடியே ஃபேமஸ் ஆகிவிட்டார்கள்” எனப் பேசினார்.