கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆவண காப்பகம் மற்றும் கம்ப்யூட்டர் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின. விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ராஜ் என்பவருக்கு சொந்தமான தனியார் மகேந்திரா டிராக்டர் ஷோரூமில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அதனை கண்டு கடையின் உரிமையாளர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் அடிப்படையில் இரண்டு தீயணைப்பு வாகனங்களில் விரைந்து அப்பகுதிக்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த டிராக்டர் ஷோரூமில் நிறுவனம் சார்ந்த மற்றும் வாடிக்கையாளர்களின் ஆவணங்கள் மற்றும் டிராக்டருக்கு பயன்படுத்தப்பட்ட உதிரி பாகங்கள், கம்ப்யூட்டர்கள், இயந்திரங்கள் இருந்த அறையில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதுமாக எரிந்து நாசமானது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமாகி இருப்பதாக முதல் கட்ட தகவல் கிடைத்துள்ளது.
தீ விபத்திற்கு மின் கசிவு காரணம் என்று கூறப்பட்டாலும், விபத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து கரூர் நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்