மாமன்னன் படத்தில் வெற்றியைத் தொடர்ந்து படத்தில் நடிகர் வடிவேலுவின் நடிப்பைப் பாராட்டும் வகையில் அவரது இல்லத்திற்கு சென்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார் அமைச்சன் உதயநிதி ஸ்டாலின்.
மாமன்னனின் மாபெரும் வெற்றி
கடந்த ஜூன் 29 ஆம் தேதி வெளியான மாமன்னன் திரைப்படம் இந்த ஆண்டில் வெளியான மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக இடம்பிடித்திருக்கிறது. படம் வெற்றிபெற்ற மகிழ்ச்சியை படத்தில் நடித்த ஒவ்வொருவருடனும் பகிர்ந்துகொண்டு வருகிறார் நடிகர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். தற்போது நடிகர் வடிவேலுவை சிறப்பிக்கும் வகையில் அவருக்கு படக்குழுவுடன் சென்று அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்திருக்கிறார் உதயநிதி
மாரி செல்வராஜுக்கு கார் பரிசளித்த உதயநிதி
ஏற்கனவே மாமன்னன் படத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் கதாநாயகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இயக்குநர் மாரி செல்வராஜூற்கு மினி கூப்பர் காரை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
வடிவேலு
இதுவரை படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்துவந்த வடிவேலு இந்தப் படத்தில் மிக சீரியஸான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மிக நீண்ட கால இடைவெளிக்குப் பின் வடிவேலு நடித்துள்ள இந்தக் கதாபாத்திரம் இன்னும் பல ஆண்டுகளுக்கு அனைவராலும் பேசப்படும் என்று விமர்சகர்கள் கூறியுள்ளார்கள்.
மாமன்னன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், லால், சுனில் என பலரும் நடித்துள்ள படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் உதயநிதி ஸ்டாலின் சினிமா பயணத்தில் கடைசிப்படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்போடு கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
கதைச்சுருக்கம்
அடங்கி நடக்க வேண்டும் என நினைக்கும் ஆதிக்க வர்க்கத்தினர், சமூகத்தில் முன்னேற நினைத்து அனைவரையும் சமமாக பார்க்க சொல்லும் பட்டியலின மக்கள் என மாரி செல்வராஜின் முந்தைய படங்களைப் போல, ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தையும், அரசியலையும் ஆதிக்க சாதியினர் தங்களுக்கு சாதகமாக எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை பொட்டில் அடித்தாற்போல் உணர்த்தி இருக்கிறது மாமன்னன்.