தன் தலைமுறையை தழைக்குச் செய்ய அக்கறை காட்டும் முதலமைச்சர், தமிழக இளைய தலைமுறையை தழைக்கச் செய்ய அக்கரை காட்ட, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், "தற்போது இணைய வழி குற்றத்தால் இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. சைபர் க்ரைம் என்ற இணைய வழி குற்றத்தின் மூலம் பாதுகாப்பு இன்மை, நிதி, பணம் போன்றவற்றிக்கு தீங்கு விளைவிக்கிறது. இன்றைக்கு தங்கள் தலைமுறையை தழைக்கச் செய்யும் வகையில் கருணாநிதியின் குடும்ப வாரிசு அதிகரித்துவிட்டது. கருணாநிதிக்கு முன், கருணாநிதி பின் என்ற நிலை உருவாகியுள்ளது. கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சர்கள், துணை முதலமைச்சர், மேயர், தற்போது உதயநிதியை எடுத்து கொண்டால் எம்.எல்.ஏ, இளைஞர் அணி செயலாளர், அமைச்சர், அடுத்து துணை முதலமைச்சர், முதலமைச்சர் என்று அவர்கள் தலைமுறையை தழைக்க அக்கறை செலுத்தி தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
இன்றைக்கு இணையவழி குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. இந்த 17 மாதத்தில், ஒரு லட்சத்து 29ஆயிரத்து, 178 புகார்கள் வந்துள்ளது. இதில் 2,806 புகாருக்கு மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்ட சதவீதம் 2. 2% மட்டும்தான். ஆனால் மற்ற மாநிலங்களில் சதவீதம் அதிகரித்து உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 617 புகார்கள் வந்ததில், 23,260 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 17.3% ஆகும். அதே போல் மேகாலயாவில் 8 சதவீத புகார்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முழு காரணம் தமிழகத்தில் கணினி அதிகாரிகள் இல்லாததால் இந்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கணினி அறிவு புரட்சி வரவேண்டும் என்று 2011 ஆம் ஆண்டில் மடிக்கணினி திட்டத்தை அம்மா வழங்கினார். இதுவரை 52 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தனியார் ஏஜென்சிகளை ஊக்குவிக்கும் வகையில் 115 வது அரசாணை வெளியிட்டது எதிர்ப்பு என்றவுடன் பின்வாங்கியது. அதேபோல் 12 மணி நேர வேலை என்ற மசோதாவை நிறைவேற்றியது எதிர்ப்பு என்றவுடன் பின்வாங்கியது. நீட் தேர்வை ரத்து செய்யவில்லை, கல்வி கடனை ரத்து செய்யவில்லை, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு செங்கலை காட்டினார்கள், கைக்கு செங்கோல் வந்தவுடன் ஒரு செங்கலை கூட வைக்க முயற்சிவில்லை. புதிதாக பொறுப்புள்ள டிஜிபி இதுகுறித்து விளக்கம் கொடுக்க வேண்டும். தினந்தோறும் குடும்பத்தை சீரழிக்கும் இணையவழி குற்றத்தை சரி செய்ய திராவிட மாடல் அரசு முன் வருமா? அல்லது சரியான உத்தரவு பிறப்பிக்குமா என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என கூறினார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்