‘மாமன்னன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை தொடங்கி நடைபெற்று வருகிறது. வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட இப்படத்தில் பலர் நடித்துள்ளனர். மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.


படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று வரும் நிலையில், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல திரைத்துறை நட்சத்திரங்களும் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் விழாவில் கலந்துகொண்ட  இயக்குநர்கள் பேசியதாவது:


கிருத்திகா


“என்னை மேடையேத்த வேண்டாம்னு சொன்னேன். ஆனால் மேடை ஏறி விட்டேன். உதய் என்னை இம்ப்ரெஸ் பண்ணிட்டாரு. படம் இரண்டு நாளைக்கு முன்னாடி பார்த்தேன். வடிவேலு தான் இந்த படத்தோட ஹீரோ” என்றார்.


மிஷ்கின்


“இந்த மேடை முக்கியமானது. மாரி இரண்டு படங்களிலேயே 20 படத்துக்கான பெயர் வாங்கிருக்கார். இந்தியாவின் தலைச்சிறந்த இயக்குநர்களில் மாரி செல்வராஜ் ஒருவர் என சொல்வேன். ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜாக்கு அடுத்து ஒரு ஜூனியஸ் என சொல்வேன். அவர் ரொம்ப நாள் வாழ்ந்து இசையில் நம்ம மகிழ்விக்கணும்.


வடிவேலு அடுத்த ஜீனியஸ். கமலை வச்சிகிட்டு இதை சொல்றேன். நாகேஷுக்கு அடுத்தப்படியாக உடல் மொழியை வைத்து நகைச்சுவை பண்ணியவர். 


உதய் சினிமாவை விட்டுப் போக வேண்டாம். இந்த மாதிரி ஒரு படத்தை அரசியல்ல எடுக்க வேண்டாம். இனிமேல் படம் பண்ணா ‘மாமன்னன்’ மாதிரி படம் பண்ணுங்க. சைக்கோ மாதிரி பண்ணாதீங்க. தயவு செய்து சினிமாவை விட்டு போகாதீங்க. நான் வேணும்னா அம்மாகிட்ட பேசுறேன். வருசத்துல ஒரு 40, 50 நாள் மட்டும் வந்து நடிங்க. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி அடையும். 


நான் கமல் பத்தி பேசல. ஏன்னா என்னோட ஒருநாள் கமல் பத்தி பேசாம போனது இல்ல” எனப் பேசிய மிஷ்கின் தொடர்ந்து அனைவரின் கேட்டுக் கொண்டதன் பேரில், அனைவரும் எழுந்து நின்று கமல்ஹாசனுக்கு கைத்தட்டல் கொடுத்து மகிழ்வித்தனர்.


பாண்டிராஜ்


”என் நண்பர் இந்தப் படத்துல நடிக்கிறதால படத்தைப் பத்தி பேசிட்டு இருப்பான். போஸ்டர் பாக்குறப்ப இது வேற மாதிரி படம்னு தோணுச்சு. அனைவருக்கும் என் வாழ்த்துகள்” என்றார்.


தியாகராஜன் குமாரராஜா


”மாரியின் முதல் படத்துல இருந்து அவரின் வேலையை விரும்பி பார்கிறேன். அவர் செய்தது மிகப்பெரிய விஷயம். வைகைப்புயல், இசைப்புயல், இளம் புயல் மூன்று பேரையும் ஒன்றாக சேர்த்தது தான்”  என்றார்.


விக்னேஷ் சிவன்


”மாரி வந்து நான் உதவி இயக்குநராக வேலை பார்த்து இருந்த டைம்ல இருந்து தெரியும். அவரிடம் ரொம்ப ஃப்ரீயா பேசுவேன். உதயநிதி ஸ்டாலினுக்கு இந்தப் படம் சினிமா கேரியரில் பெஸ்ட் படமாக இருக்கும்.  வடிவேலு முன்னாடி பேசுறது சிறந்த விஷயம். எல்லோருக்கும் வாழ்த்துகள்”


பிரதீப் ரங்கநாதன்


“இப்ப நான் என்ன சொல்றது. இந்த வாழ்க்கைல எல்லா நேரங்களும் வடிவேலு வசனங்களால் நிறைந்துள்ளது. அது ஒரு தனி மொழி. எனக்கு அவருடன் பணிபுரிய வேண்டும் என ஆசைப்பட்டேன்.  வாரத்துக்கு ஒரு முறையாது ரஹ்மான் பத்தி பேசுவேன், பாட்டை கேப்பேன். பஹத் கூட வேலை பார்க்க ஆசைப்பட்டேன். பரியேறும் பெருமாள் படத்துல இருந்தே மாரி வொர்க் பார்த்து ரசிக்க ஆரம்பித்தேன். கவனிச்சேன். 


உதயநிதி ஸ்டாலினுடன் 2,3 முறை பேசிருக்கேன். யாராக இருந்தாலும் அவருக்கு சமமாக தான் பேசுவாரு. அவர் படம் நல்ல இல்லைன்னா நல்லா இல்லன்னு சொல்றாரு. அவர் படமாக இருந்தாலும் வெளிப்படையா பேசுவாரு. அது எனக்கு பிடிக்கும்.  கீர்த்தி சுரேஷ் நிங்க ரொம்ப அழகா இருக்கீங்க” எனப் பேசினார்.