‘மாமன்னன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது விடுமுறையை தாய்லாந்தின் கோ சாமுயி தீவில் கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்


தமிழ் சினிமாவில் தனது 8 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் கீர்த்தி சுரேஷ். 2015ஆம் அண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்த ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.


இதனைத் தொடர்ந்து ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த தொடரி படத்தில் மேக்கப் இல்லாமல் நடிப்பில் அசத்திய கீர்த்தி சுரேஷ், அதே ஆண்டு சிவகார்த்திகேயன் படத்தில் பப்ளி மருத்துவராக வந்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார். சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைந்த கீர்த்தி சுரேஷ், ரஜினி முருகன் படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். 


நடிகையர் திலகம் சாவித்திரி


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் கீர்த்தி சுரேஷின் நடிப்பை திரையுலகமே பார்த்து வியந்தது நடிகையர் திலகம் படத்தில் தான். தென்னிந்தியாவின்  நடிகையர் திலகம் என அழைக்கப்படும் பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை கொண்டு எடுக்கப்பட்ட ‘மகாநடி’ படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.


நடிப்புக்கே பெயர் போன சாவித்ரி போல், அவரது ஒவ்வொரு அசைவுகளையும் மீண்டும் திரையில் கொண்டு வந்தார் கீர்த்தி சுரேஷ். நடிகையர் திலகம் சாவித்ரியை கண்முன் காட்டிய கீர்த்தி சுரேஷின் நடிப்புக்கு பெருமை சேர்க்கும் விதமாக தேசிய விருது கிடைத்தது. 


தொடர்ந்து, அண்ணாத்த படத்தில் ரஜினியின் பாசமான இன்னசெண்ட் தங்கையாக நடித்த இவர், செல்வராகவன் நடிப்பில் வெளிவந்த சாணிக் காயிதம் படத்தில் எதிரிகளை பழித்தீர்க்கும் பெண் சிங்கமாக மாறி நடிப்பில் அசத்தி இருப்பார். 


தாய்லாந்தில் சுற்றுலா






இந்நிலையில், தற்போது தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற கீர்த்தி சுரேஷ் இந்த சுற்றுலாவின் போது எடுத்துக்கொண்ட  புகைப்படங்கள் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தனக்கு மிகபிடித்தமான கோ சாமுயி  தீவை தான் ரொம்ப மிஸ் செய்வதாக தெரிவித்துள்ளார் அவர்.


மாமன்னன்


தற்போது திரையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மாமன்னன் படத்தில் பெண்ணியவாதியாக நடித்துள்ளார் கீர்த்தி. தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கண்ணிவெடி சைரன், ரிவால்வர் ரீட்டா ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. காதல், காமெடி, கிராமத்திய பெண், பாசமிகு தங்கை, வீரம், பெண்ணியம் என பல விதங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்திய கீர்த்தி சுரேஷ் தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.