மாமனிதன் திரைப்படம் டோக்கியோ பட விருதுகள் விழாவில் கோல்டன் விருதை வென்றுள்ளது.


இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நான்காவது முறையாக விஜய்சேதுபதி இணைந்த படம் 'மாமனிதன்'. பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தயாரித்த இந்தப்படம் இந்தப்படத்திற்கு அவரும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்து இருந்தனர்.


ஆனால் சீனு ராமசாமிக்கும் இளையராஜாவுக்கும் இடையே பிரச்னை நடந்த நிலையில், அதன் காரணமாக நீண்ட நாட்களாக இந்தப்படம் வெளியாகமலேயே இருந்தது. அதன் பின்னர் பிரபல தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ்  மாமனிதன் படத்தை வாங்கி வெளியிட்டார்.


 


 






ஆனால் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் சீனுராமசாமியை அழைத்து பாராட்டினார். இந்த நிலையில் மாமனிதன் படம் டோக்கியோ பட விருதுகள் விழாவில், சிறந்த ஆசியப்பட பிரிவில் கோல்டன் விருதை வென்றுள்ளது.


 






இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு சீனுராமசாமி, “Tokyo Film Awards எனும் சர்வதேச திரைப்பட விழாவில் மாமனிதன் திரைப்படம் சிறந்த ஆசிய திரைப்படம் எனும் கோல்டன் விருதை பெற்றுள்ளது.தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு நன்றி” என்று குறிப்பிட்டு இருக்கிறார்


 


முன்னதாக,ரஜினிகாந்த் போனில் பேசியது குறித்து சீனுராமசாமி பகிர்ந்தது


நள்ளிரவு 3 மணிக்கு எனக்கு ஒரு போன் வந்தது. மாமனிதன் பார்த்துவிட்டு ரஜினிகாந்த மனம் நிறைந்து பாராட்டினார். விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பு என ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு பாராட்டினார். நான் ஒரே வார்த்தை சொன்னேன். ''ரொம்ப தெம்பா இருக்கு சார். நன்றி'' என்றேன். அந்த நேரத்தில் இதனை யாரிடம் சொல்வது என்றே தெரியவில்லை. தூங்கிக் கொண்டிருந்த மனைவியை எழுப்பி ரஜினிகாந்த் பாராட்டியதைச் சொல்லி செல்போனை காண்பித்தேன். விஜய்சேதுபதி இல்லாமல் இந்தப்படம் இல்லை. யுவனுக்கு இப்படம் ஒரு குழந்தைபோலதான்” என்றார்