காமன்வெல்த் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் குழு பிரிவில் இந்திய ஆடவர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது. இறுதிப் போட்டியில் இந்திய அணி சிங்கப்பூர் அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது. இந்நிலையில் இன்று முதல் பாரா டேபிள் டென்னிஸ் போட்டிகள் தொடங்கின. 


 


இதில் மகளிருக்கான கிளாஸ் 3-5 பிரிவில் இந்தியாவின் பவினா பட்டேல் மற்றும் சோனல்பென் பட்டேல் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். முதல் சுற்றுப் போட்டியில் பவினா பட்டேல் டேனியலாவை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் முதல் கேமை பவினா 8-11 என இழந்தார். அதன்பின்னர் அடுத்த மூன்று கேம்களையும் 11-4,11-7,11-9 என்ற கணக்கில் வென்றார். 







அதேபோல் சோனல்பென் பட்டேல் தன்னுடைய முதல் போட்டியில் சு பெய்லியை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் முதல் கேமை சோனல்பென் பட்டேல் 11-7 என்ற கணக்கில் வென்றார். இரண்டாவது கேமையும் 11-5 என வென்றார். மூன்றாவது கேமை சோனல்பென் 6-11 என இழந்தார். நான்காவது கேமை 11-7 என சோனல்பென் வென்றார். அத்துடன் பெய்லியை வீழ்த்தினார். சோனல்பென் மற்றும் பவினா பட்டேல் ஆகிய இருவரும் இன்று இரவு நடைபெறும் இரண்டாவது குரூப் போட்டியில் விளையாட உள்ளனர்.


 




மகளிருக்கான கிளாஸ் 6-10 பிரிவில் இந்தியாவின் பேபி சஹானா நைஜீரியாவின் ஃபையித்தை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் நைஜீரிய வீராங்கனை ஃபையித் 11-9,11-8,11-6 என்ற கணக்கில் வென்றார். இதன்மூலம் முதல் குரூப் போட்டியில் பேபி சஹானா தோல்வி அடைந்துள்ளார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண