கொரோனா காலக்கட்டங்களின் திரைத்துறையை சேர்ந்த நிறைய பிரபலங்கள் உயிரிழந்தனர். அதில் ஒருவர்தான் நடிகர் விவேக். சின்ன கலைவானர் என அன்போடு அழைக்கப்பட்ட விவேக்கின் மரணம் அவரின் உறவினர்கள், திரைத்துறையினர் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. சமூக நலனில் அதிக அக்கறை கொண்ட விவேக் அவர்கள் அப்துல்கலாம் சொல்லிய வழியை அப்படியே பின்பற்றி நடந்தார். தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் சரி , அதில் வக்கிரங்களை புத்தாமல் , மற்றவர்களை கேலி கிண்டல் செய்யாமல் நாகரீகமான முறையில் மக்களை சிரிக்கவும் , சிந்திக்கவும் வைத்தவர் விவேக்.
கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி தடுப்பூசி செலுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார் விவேக் . அதன் பிறகு உடல்நிலையில் தொய்வு ஏற்ப்பட்டதால் ஓய்வெடுத்த விவேக் , ஏப்ரல் 17 ஆம் தேதி இயற்கை எய்தினார். தடுப்பூசி செலுத்திய இரண்டே நாள்களில் விவேக் உயிரிழந்ததால் தடுப்பூசி செலுத்தியதால்தான் அவர் இறந்துவிட்டார் என தகவல் பரவியது.ஆனால் மாரடைப்பு காரணமாகத்தான் அவர் உயிரழந்தார் என உறுதி செய்யப்பட்டது. இறந்தாலும் உன்னை ஊர் சொல்ல வேண்டும் என்ற வரிகள் நமது சின்ன கலைவானர் விவேக் அவர்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.