தமிழ் சினிமாவில் விரல் விட்டும் எண்ணும் பாடலாசிரியர்களுள் விவேகாவும் ஒருவர். விவேகா ”நீ வருவாய் என” என்ற படத்தில் “பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா” என்ற பாடலின் மூலம் தமிழ்த் திரையுலகப் பாடலாசிரியராக அறிமுகமானார்.  அதன் பிறகு அவ்வபோது பாடலை எழுதி வந்தவருக்கு கந்தசாமி திரைப்படம் மிகப்பெரிய மார்கெட்டை உருவாக்கி தந்தது. தற்போது மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு விவேகாதான் பாடலாசிரியர். சமீபத்தில் புஷ்பா திரைப்படத்தில் வெளியான் ஒ சொல்றியா மாமா பாடலை எழுதியவர் விவேகா என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களின் திரைப்படங்களுக்கு விவேகா அவர்கள்தான் பலமுறை ஓபனிங் சாங் அதாவது அறிமுக பாடலை எழுதியிருக்கிறார்.




அதிக ரசிகர்களை  கொண்ட நடிகர் அஜித்தை எடுத்துக்கொண்டால் அவரது வேதாளம், வீரம்  உள்ளிட்ட படங்களுக்கு ஓபனிங் பாடலை எழுதியிருக்கிறார். அதே போல விஜய்யை எடுத்துக்கொண்டால் நண்பன் , துப்பாக்கி , ஜில்லா, வில்லு போன்ற பல படங்களுக்கு பாடல்களை எழுதியியுள்ளார். சூர்யாவின் சிங்கம் சீரிஸ் படங்களுக்கு பாடல் எழுதியதும் விவேகாதான். இது குறித்து நேர்காணல் ஒன்றில் பகிர்ந்த விவேகா அவர்கள் “ நான் மட்டுமல்ல பெரும்பாலான பாடலாசிரியர்கள் , காதல் டூயட்டுகள்தான் எழுதியிருப்பார்கள். ஏனென்றால் எல்லா படங்களிலும் ஹீரோ, ஹீரோயின் என்றாலே காதல் முக்கிய பங்கு வகிக்கிறது அல்லவா! அதுதான். அதில் உடல் மொழி சார்ந்து வரிகள் வருவதற்கான காரணம்..மனசு என்பதை தாண்டி உடல் ஈர்ப்பும் காதலில் முக்கிய பங்கு வகிப்பதுதான் என்கிறார் விவேகா.  மேலும் “அஜித் , விஜஜ் போன்ற நடிகர்களுக்கு பாடல் எழுதுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும்..எனென்றால் அந்த வரிகளை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பது நமக்கு முன்பே தெரிந்துவிடும். நான் படங்களை சார்ந்து மட்டுமல்லாமல் , ரசிகர்கள் கொண்டாடும் அவர்களின்  இயல்பான குணங்களையும் வரிகளாக அமைப்பேன்.. உதாரணத்திற்கு அஜித் என்றால் தன்னம்மிக்கை , உழைப்பு..விஜய் சார்ணா அமைதி என அவர்களின் இயல்புகளை இணைத்துதான் பாடலாக எழுதுவேன் என்கிறார், 




சூர்யா இயல்பாகவே சமூக நலனில் அக்கறை கொண்டவர் என கூறும் விவேகா. அவருடனான  அனுபவம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். சிங்கம் திரைப்படத்தின் ஷூட்டிங்  ஒரு இடத்தில் முடிந்த சமயத்தில் , ஷூட்டிங் ஸ்பாட்டை விசிட் செய்ய சென்றிருக்கிறார் விவேகா. அப்போது சூர்யா மைக்கை கையில் எடுத்து இங்கு இருக்கும் காகிதங்களை இப்போது சுத்தம் செய்யாவிட்டால் , நான் சுத்தம் செய்துவிட்டுதான் வருவேன்...என அன்பாக கூறினாராம். உடனே அங்கிருந்தவர்கள் காகிதங்களை சுத்தம் செய்தார்களாம் . சூர்யா வெளியில் காட்டிக்கொள்வதற்காக எதையும் செய்வதில்லை. அவர் இயல்பாகவே சமூகம் சார்ந்த சிந்தனைகளை கொண்டவர் என்கிறார் விவேகா.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண