தனது சிறிய வயதில் இருந்தே இசை மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் சென்னையை சேர்ந்த லிடியன் நாதஸ்வரம். அதனால் அவரின் தந்தை வர்சா சதீஷ் தனது துறையிலேயே லிடியனை இணைந்துகொண்டார். பியானோ வாசிப்பதில் திறமையை மென்மேலும் வளர்த்து கொண்ட லிடியன் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு ராகங்களை இருவேறு பியானோவில் வசிக்கும் திறமை பெற்றவர். அனைவரையும் திகைக்க வைக்கும் லிடியன் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொண்டு வேர்ல்ட்'ஸ் பெஸ்ட் என விருதுடன் 7 கோடி ரூபாயையும் பரிசு தொகையாக பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 



இளையராஜாவின் முதல் மாணவன் :


ஏராளமான பாராட்டுகளை குவித்த லிடியனை, இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் "இந்தியாவின் இசை தூதுவன்" என பாராட்டியுள்ளார். மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாவின் தீவிரமான ரசிகன் லிடியன் நாதஸ்வரம். என்னுடைய ஆசிரியர் இசைஞானி இளையராஜா என்றும் அவரின் முதல் மாணவன் நான் என்றும் ஏற்கனவே தனது இன்ஸ்டாகிராம் மூலம் அவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை போஸ்ட் செய்து இருந்தார். 


லைக்ஸ்களை அள்ளும் லிடியன் போஸ்ட் :


சோசியல் மீடியாவில் அவ்வப்போது ஏதாவது போஸ்ட் போட்டு  லைக்ஸ்களை அள்ளும் லிடியன் நாதஸ்வரம் தற்போது தனது தந்தையை பாடவைத்து அவர் பியானோ வாசிக்கும் வீடியோ ஒன்றை போஸ்ட் செய்துள்ளார். லிடியன் தனது தந்தை ஒரு சில வரிகள் பாட வேண்டும் என ஆசை பட்ட அந்த அழகான பாடல் 'விடுதலை' படத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளியான 'காட்டுமல்லி...' பாடல். லிடியன் போஸ்ட் செய்துள்ள இந்த வீடியோ சோசியல் மீடியாவில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.  


 






 


வெற்றிமாறன் - இளையராஜா கூட்டணி :


வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'விடுதலை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் முதல் முறையாக இசையமைத்து இருந்தார் இசைஞானி இளையராஜா. அப்படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே இடம்பெற்றன. உன்னோடு நடந்தா மற்றும் காட்டுமல்லி பாடல். இரண்டுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. காட்டுமல்லி பாடலை இளையராஜாவே எழுதி பாடியிருந்தார் என்பது தனி சிறப்பு. அவருடன் அபிநயா பஃட்டும் இணைந்து பாடியிருந்தார்.