மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் ஒன்றான மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வி.பெருமாள்பட்டி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பூஜைப்பாறை பெருமாள் கோயில்., இக்கோயில் சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக பங்குனி உற்சவ திருவிழா ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம்.
பல்வேறு காரணங்களால் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு திருவிழா நடைபெறாமல் இருந்த சூழலில் இந்த ஆண்டு இத் திருவிழா 7 ஆண்டுகளுக்கு பின் நேற்று முன்தினம் முதல் துவங்கி வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.,
திருவிழாவின் முக்கிய நிகழ்வான கருப்பசாமி, கன்னிமார் சிலைகள் எடுப்பு விழாவிற்காக அருகே உள்ள வில்லாணியில் சிலைகள் செய்யப்பட்டு வி.பெருமாள்பட்டிக்கு எடுத்து வரப்பட்டது., தொடர்ந்து வி.பெருமாள்பட்டியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மேளதாளங்கள் வான வெடி முழங்க ஊர்வலமாக மலை அடிவாரத்தில் உள்ள பூஜைப்பாறை பெருமாள் கோவிலுக்கு கருப்பசாமி, கன்னிமார் சிலைகள் எடுத்து செல்லும் நிகழ்வு வெகுவிமர்சையாக நடைபெற்றது.,
வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் சாமி சிலைகளுக்கு புனித நீர் தெளித்து, மாலை மரியாதை செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர்., தொடர்ந்து மலை அடிவாரத்தில் உள்ள பூஜைப்பாறை பெருமாள் கோவிலுக்கு எடுத்து செல்லப்படும் சாமி சிலைகளுக்கு நாளை அதிகாலை பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அன்னதானம் நடைபெறும் என விழா கமிட்டியினர் தெரிவித்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - நடிப்பது வேறு இயக்குவது வேறு, படம் இயக்காமல் இருந்தது ஏக்கத்தை தந்தது - இயக்குநர் இமயம் பாரதிராஜா
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்