இன்று மாலை 6 மணிக்கு, ராட்சஸ மாமனே பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகவுள்ளது.சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்து முடிந்தது. பொன்னியின் செல்வன் விழா நடந்த அந்த நாளிலே படத்தின் பாடல்கள் முன்கூட்டியே ஸ்பாட்டிஃபை செயலியில் வெளியாகியது.
ஏற்கனவே சோழா சோழா, பொன்னி நதி வெளியான நிலையில், சொல், அலைகடல், தேவராளன் ஆட்டம், ராட்சச மாமனே ஆகிய 4 பாடல்கள் வெளியானது . இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வந்தனர். முன்பு வெளியான பொன்னி நதி பாடலுக்கும் சோழா சோழா பாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இன்று மாலை 6 மணிக்கு, ராட்சஸ மாமனே பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகவுள்ளதாக லைகா நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இப்பாடல், வந்தியதேவனுக்கான பாடலாக அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ராட்சஸ மாமனே பாடல் ரிலீஸ் குறித்த தகவலை, லைகா நிறுவனம் அதன் இன்ஸ்டா பக்கத்திலும் வெளியிட்டுள்ளது.
ஸ்பாட்டிஃபையில் வெளியான ராட்சஸ மாமனே பாடலின் புகைப்படத்தில், கார்த்தி அரக்கன் போன்ற வேடமிட்ட ஸ்டில் இருந்தது. அதுபோக ட்ரைலரிலும், அதுதொடர்பான காட்சிகள் இடம் பெற்று இருந்தது. முன்னதாக பொன்னியின் செல்வன் டீசர் மற்றும் பாடல்கள் டிப்ஸ் தமிழ் யுடியூப் சேனலில் வெளியானது. அதுபோல் இன்று வெளியாகவிருக்கும் ராட்சஸ மாமனே பாடலும் இந்த யுடியூப் பக்கத்தில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. டிப்ஸ் தமிழ் போல, டிப்ஸ் தெலுங்கு, டிப்ஸ் மலையாளம் என பல மொழிகளில் யுடியூப் சேனல் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இதற்கு முன்னர், படத்தின் உலகளாவிய விநியோகம் குறித்த முழு விவரத்தையும் லைகா தயாரிப்பு நிறுவனமானது வெளியிட்டு இருந்தது. இதில் அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, சிங்கப்பூர் போன்ற பல உலக நாடுகளின் விநியோக பட்டியல் வெளியானது.