ராகவா லாரன்ஸ், வடிவேலு கங்கனா ரனாவத் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியுள் சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில்  லைகா சுபாஸ்கரனும் பங்கேற்றார். அப்போது ரசிகர்கள் அவரிடம் அஜித்தின் விடாமுயற்சி அப்டேட்டை ஆர்வமாக கேட்டு ஆர்ப்பரித்தனர். இதனால் சுபாஸ்கரன்  விடாமுயற்சி படத்தின் அப்டேட்டை அதிரடியாக அறிவித்தார்.


விடாமுயற்சி:

நடிகர் அஜித்துக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித், தற்போது விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியுள்ளார். அஜித்தின் 62-வது திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஏகே 62 படத்தின் இயக்குநராக முதலில் விக்னேஷ் சிவன் கமிட்டாகியிருந்த நிலையில், சில காரணங்களால், அதன்பின்னர் மகிழ் திருமேனி அதில் கமிட்டானார். இதனால், மார்ச் மாதம் தொடங்க இருந்த ஏகே 62 ஷூட்டிங் தள்ளிப்போனது. 

அஜித் தற்போது,  நேபாளம், பூடான், நார்வே என கண்டம் விட்டு கண்டம் டூர் சென்றிருக்கிறார். விடமுயற்சி படத்தின் அப்டேட் ஏதேம் வெளியாகததால் அவரின் ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர். அஜித்துடன் இணையும் வாய்ப்பு திடீரென சர்ப்ரைஸாக கிடைத்ததால், ஏகே 62 ஸ்கிரிப்ட்டை பார்த்து பார்த்து எழுது வருகிறாராம்  இயக்குனர் மகிழ் திருமேனி. அதுவரை சும்மா இருக்க முடியாது என அஜித் பைக் ட்ரிப் சென்றுவிட்டார். 




தொடர்ந்து அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களை திருப்தி படுத்த அஜித் பிறந்தநாளில் ஏகே 62 டைட்டில் 'விடாமுயற்சி' என்பதை மட்டும் படக்குழு அறிவித்தது. ஆனால், அதனை அடுத்து இந்தப் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. கடந்த சில நாட்களாக விடாமுயற்சி திரைப்படம் ட்ராப் ஆகவிருப்பதாக செய்திகள் வெளியானது. லைகாவிற்கு திடீர் கடன் நெருக்கடி என்றும், அதனால் அஜித்தின் விடாமுயற்சி மற்றொரு முன்னணி நிறுவனத்துக்கு கை மாறுவதாகவும் சொல்லப்பட்டது.


விரைவில் ஷூட்டிங்:

இதனால் அஜித் ரசிகர்கள் சற்று அப்செட்டில் இருந்தனர். இந்நிலையில் அவர்கள் குதூகலம் அடைந்துள்ளனர். நேற்று  சந்திரமுகி 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா  நடைபெற்றது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற லைகா சுபாஸ்கரன் மேடையேறிய போது, அஜித் ரசிகரக்ள் அவரிடம் அஜித்தின் விடாமுயற்சி அப்டேட் கேட்டு ஆர்ப்பரித்தனர்.


இந்நிலையில்,  விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என அவர் அப்டேட் கொடுத்துள்ளார். விடாமுயற்சி திரைப்படம் லைகாவுக்கு மிக முக்கியமான ப்ராஜக்ட் என்பதால், அது இனிமேல் தாமதமாகாது என உறுதியாகக் கூறினார். மேலும், சுபாஸ்கரன் விடமுயற்சி திரைப்படம் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும் என்றும் தெரிவித்தார். இதனால் அஜித் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.


மேலும் படிக்க


Asia Cup 2023: விரைவில் பாகிஸ்தான் - இந்தியா இருதரப்பு தொடரா..? பாகிஸ்தான் பறக்கும் பிசிசிஐ தலைவர், துணை தலைவர்!


Madurai train fire: ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம்.. துக்கத்தில் பங்கெடுத்த முதல்வர் ஸ்டாலின்!