Madurai train fire: ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம்.. துக்கத்தில் பங்கெடுத்த முதல்வர் ஸ்டாலின்!

மதுரை ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதியதவி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Continues below advertisement

மதுரை ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதியதவி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Continues below advertisement

மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் தீடிரென ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 9 பேரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 

லக்னோவில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வந்த சுற்றுலா ரயில் மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது பயணிகள் சிலர் ரயிலில் சமையல் செய்யும் வீட்டு சிலிண்டர் பயன்படுத்தி வந்துள்ளனர். அப்போது, இந்த சிலிண்டரானது வெடித்து பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 9 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  சம்பவ இடத்தில் தீயணைப்புத் துறையினர் தீயணைக்கும் பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இந்தநிலையில், மதுரை இரயில் நிலையத்தில் சுற்றுலா இரயில் பெட்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “உத்திரப் பிரதேச மாநிலம் சித்தூரிலிருந்து இராமேஸ்வரத்திற்கு வந்த ஆன்மீக சிறப்பு சுற்றுலா இரயிலில் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்பட்டு மதுரை இரயில் நிலையத்தில் இன்று (26-8-2023) அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அதில் பயணித்த பயணிகள் சமையல் செய்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

மதுரை மாவட்ட ஆட்சியரை உடனடியாக விபத்து நடந்த இடத்திற்குச் சென்று உரிய மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊர்களுக்குக் கொண்டுசெல்ல தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். மேலும், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்களை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தேவையான உதவிகளை செய்திடுமாறும் கேட்டுக்கொண்டேன்.” என குறிப்பிட்டுள்ளார். 

Continues below advertisement