தமன்னா, கஜோல், ம்ருனால் தாகூர் ஆகியோர் நடித்துள்ள  லஸ்ட் ஸ்டோரீஸ் இரண்டாம் பாகத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.


கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் படத்தின் இரண்டாம் பாகத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. தமன்னா, கஜோல், ம்ருனால் தாகூர் ஆகியோர் இதில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.


பாலியல் சார்ந்த கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆந்தாலாஜி லஸ்ட் ஸ்டோரிஸ். சமூகத்திலும் பாலியல் சார்ந்த கதைகள் குறித்தான ஒரு புரிதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது லஸ்ட் ஸ்டோரீஸ். மேலும் திரைப்படங்களில் பாலியல் ரீதியிலான கதைகள் வெளிப்படையாக பேசப்படாத காரணத்தினால் பாலிவுட்டின் நான்கு முக்கிய இயக்குநர்கள் இந்த ஆந்தாலாஜியை இயக்க நியமிக்கப்பட்டார்கள்.  இயக்குநர் அனுராக் கஷ்யப், கரன் ஜோஹார், ஜோயா அக்தர் மற்றும் திபாகர் பானர்ஜீ ஆகியவர்கள் முதல் பாகத்தை இயக்கினார்கள். ராதிகா ஆப்டே, மனிஷா கொய்லாரா, கியாரா அத்வானி விக்கி கெளஷல் போன்ற முக்கிய நடிகர்கள் இதில் நடித்திருந்தார்கள்.


 முதல் பாகத்தில் இயக்குனர் அனுராக் கஷ்யப் மற்றும் ஜோயா அக்தர் இயக்கிய பகுதிகள் பரவலாக பேசப்பட்டன. தற்போது லஸ்ட் ஸ்டோரீஸின் இரண்டாம் பாகத்தின் டீஸர் வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.






 நடிகர்கள்


மேலும் முதல் பாகத்தைப் போலவே பல்வேறு பிரபலமான நடிகர்களை இந்த டீஸரில் பார்க்க முடிகிறது.   நடிகை தமன்னா, கஜோல் , மற்றும் சீதா ராமம் திரைப்படத்தில் அனைவராலும் சீதா மகாலட்சுமி என்கிறப் பெயரால் பரவலாக அறியப்பட்ட ம்ருனால் தாகூர் ஆகியவர்கள் இதில் நடித்துள்ளார்கள். முதல் பாகத்தைப் போலவே பாலியல் தொடர்பான நான்கு கதைகளை கொண்டிருக்கிறது இரண்டாம் பாகம்.


இயக்குநர்கள்


பாலிவுட்டில் பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர்கள் இந்த நான்கு கதைகளை இயக்கியுள்ளார்கள்.


கொங்கனா சென் ஷர்மா


Lipstick under my burkha, death in the gunj , ஆகியத் திரைப்படங்களை இயக்கிய கொங்கனா சென் ஷர்மா ஒரு படத்தை இயக்கியுள்ளார்.


பால்கி


ஷமிதாப், கி & கா, சீனி கம் ஆகியத் திரைப்படங்களை இயக்கிய பால்கி ஒரு படத்தையும் இயக்கியுள்ளார்.


அமித் ஷர்மா


பதாய் ஹோ திரைப்படத்தை இயக்கிய அமித் ஷர்மா ஒரு கதையை இயக்கியுள்ளார். பதாய் ஹோ திரைப்படத்தின் ரீமேக்கான ‘வீட்ல விசேஷம் ‘ஆர், ஜே பாலாஜி நடிப்பில்  கடந்த ஆண்டு வெளிவந்தது.


சஞ்ஜய் கோஷ்


மற்றும் கஹானி திரைப்படத்தை இயக்கிய  சஞ்ஜய் கோஷ் ஒரு கதையை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கான நீ எங்கே என் அன்பே 2014 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளிவந்தது.