லவ் டுடே படத்தின் தெலுங்கு ட்ரைலர் வெளியீடு தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் மறைவால் மற்றொரு நாளுக்கு  தள்ளிவைக்கப்பட்டுள்ளது.


கோமாளி இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் இயக்கத்தில் “லவ் டுடே” படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் இயக்குநரே, கதாநாயகனாக நடித்துள்ளார்.பிரதீப்பிற்கு ஜோடியாக நாச்சியார் மற்றும் ஹீரோ படத்தில் நடித்த இவானா நடித்துள்ளார். இவர்களுடன் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, சூப்பர் சிங்கர் ஆஜித் ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 


“லவ் டுடே” படம், பல திரையரங்குகளில் இன்றளவும் ஹவுஸ் ஃபுல்லாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், படத்தை ஏற்கனவே பார்த்தவர்கள், மீண்டும் மீண்டும் தியேட்டர் வாசலில் குவிந்து லவ் டுடேவை தரிசனம் செய்து வருகின்றனர். இந்த மாபெரும் வெற்றிக்கு பின்னர், இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வர க்ரியேஷன்ஸ் உடன் இணைந்து தெலுங்கு மொழியில் டப்பிங் செய்து வெளியிடபோவதாக ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது. 






தெலுங்கில் வெளியாகுவிருக்கும் லவ் டுடே படத்தின் ட்ரைலரை, விஜய் தேவரகொண்டா இன்று (15.11.2022) மதியம் 12:10 மணிக்கு வெளியிடவிருந்தார். ஆனால், இன்று அதிகாலை 4 மணிக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மற்றும் மகேஷ் பாபுவின் தந்தையான கிருஷ்ணா மாரடைப்பால் காலமானார். இதையொட்டி லவ் டுடே படத்தின் தெலுங்கு ட்ரைலர் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.






“சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா காருவின் துரதிர்ஷ்டவசமான மறைவு காரணமாக, லவ் டுடே தெலுங்கு ட்ரைலரின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.” என்று அர்ச்சனா கல்பாத்தி அவரின் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.


மேலும் படிக்க : Bigg Boss 6 Tamil: ஷூவில் ப்ளூடூத்... விதிமுறையை மீறினாரா மணிகண்டா? ஆய்வு செய்து வரும் பிக்பாஸ்!