பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளரான மணிகண்டனின் ஷூவை பிக்பாஸ் எடுத்துக்கொண்டுள்ளது.


இந்த ஆறாவது சீசன் வழக்கத்திற்கு மாறாக ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே விறு விறுப்பாக நடந்து வருகிறது. 
இந்த சீசனில் பங்குபெற்றுள்ள போட்டியாளர்களூள் ஒருவரான மணிகண்டனின் ஷூவை பிக்பாஸ் எடுத்துக்கொண்டதாக நிவாஷினி மற்றும் மைனா நந்தினி ஆகிய இருவரும் சமையல் அறையில் பேசிக்கொண்டிருந்தனர்.






காய்கறி நறுக்கிக்கொண்டிருந்த நிவாஷினியிடம், “அவன் ஒரு நாளு ப்ளூடூத் பற்றி சொல்லிக்கொண்டிருந்து இருந்தான். என்னுடைய ஷூவில் ப்ளூடூத் இருக்குடா என்று சொன்னான். ஒரு வேளை செக் பண்ணக்கூட இருக்கலாம்.” என்று மைனா நந்தினி கூறினார்.பின்னர் நந்தினி மணிகண்டனை அழைத்து,  “ ப்ளூடூத் விஷயத்தை பேசிக்கொண்டிருந்த-ல , அதனால் செக் செய்து கொடுத்திருபார்கள் என்று நினைக்கிறேன்” என்று சொன்னார். அதற்கு மணி “அப்படியா..” என்றார்.


வழக்கமாக மொபைல் போன் மற்றும் இதர எலெக்ட்ரானிக் உபகரணங்களை, பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. வெளியே என்ன நடக்கிறது என்பது தெரிய கூடாது என்பதற்காக இப்படி ஒரு விதி அமைக்கப்பட்டுள்ளது.அந்தவகையில் மணிகண்டனின் ஷூவில் உள்ள ப்ளூடூத் இந்த விதியை மீறுவதால், அதை பிக்பாஸ் கைப்பற்றியுள்ளது.


இந்த வாரத்தின் எலிமினேஷன் நாமினீஸ்கள் :






இந்த வாரம், ராபர்ட் மாஸ்டர், நிவாஷினி, ஆயிஷா,ஜனனி, அசிம், தனலட்சுமி ஆகியோர் எலிமினேஷனுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குறைந்த ஓட்டுகளை பெறுபவர்கள், இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவார்.


பிக் பாஸ் போட்டியாளர்கள் :




இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாம் வாரத்தில் ஷெரினா ஷாம் வெளியானார். நான்காம் வாரத்தில் விஜே மகேஸ்வரி எலிமினேட் செய்யப்பட்டார். இவர்கள் சென்ற பின், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன்,அரவிந்த், சீரியல் நடிகர் முகமது அசிம், சீரியல் நடிகை ஆயிஷா, மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 16  போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.