பிரதீப் ரங்கநாதன் , இவானா, சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, சூப்பர் சிங்கர் ஆஜித் ஆகியோர் நடிப்பில் நவம்பர் 4 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'லவ் டுடே'. இப்படம் வெளியான நாள் முதல் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை குவித்து சாதனை படைத்து வருகிறது. தமிழகத்தில் இப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பை அடுத்து 'லவ் டுடே' திரைப்படம் தெலுங்கில் இன்று வெளியானது. ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகிறார்கள். 


 



ஹீரோ கம் இயக்குனர் :


ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் இயக்கத்தில் “லவ் டுடே” படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் இயக்குனரான பிரதீப் ரங்கநாதனே கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தமிழகத்தில் இப்படத்தின் அமோக வரவேற்பை அடுத்து 'லவ் டுடே' திரைப்படத்தை தெலுங்கில் இன்று ஸ்ரீ வெங்கடேஸ்வர கிரியேஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டது. 


 






 


திரையரங்கை அதிர வைத்த லவ் டுடே ஃபர்ஸ்ட் ஷோ :


நவம்பர் 25ம் தேதியான இன்று 'லவ் டுடே' திரைப்படம் தெலுங்கில் வெளியானது. ரசிகர்களின் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதியது. முதல் ஷோ தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பை பெற்றுள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்காக இயக்குனர் மற்றும் ஹீரோ பிரதீப் ரங்கநாதன், ஹீரோயின் இவானா உள்ளிட்டோர் ரசிகர்களோடு சேர்ந்து திரையரங்கில் படத்தை பார்த்தனர்.


படம் முடிந்து வெளியில் வரும் போது செய்தியாளர்களிடம் ரசிகர் ஒருவர் படத்தை பற்றி புகழ்ந்து தள்ளினார். இது வேற லெவல் படம் சார். ஐ லவ் யூ சார் என கட்டி கட்டி அணைத்து கொண்டார் ரசிகர். போன் சேஞ்ச் பண்ணி லவ் பண்றது எனும் புதிய கான்செப்ட் அருமை என அந்த ரசிகரின் விமர்சனம் லவ் டுடே படத்தை வேற லெவலுக்கு கொண்டு போய் விட்டது என்றே கூற வேண்டும். அப்போது அங்கு வந்த பிரதீப் ரங்கநாதனை அந்த ரசிகர் தூக்கி வைத்து கொண்டாடினார். ஹீரோயின் நடிப்பையும் பாராட்டினார். ரசிகரின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 


 






 


நல்ல வசூலை ஈட்ட போகும் தெலுங்கு ரிலீஸ் :


“லவ் டுடே” படம், பல திரையரங்குகளில் இன்றளவும் ஹவுஸ் ஃபுல்லாக இருக்கிறது. தமிழகத்தில் அமோக வரவேற்பை பெற்றதோடு பாக்ஸ் ஆபீஸிலும் நல்ல வசூலை குவித்தது. இதுவரையில் உலக அளவில் 70 கோடி வசூலை ஈட்டிய 'லவ் டுடே' திரைப்படம் இன்னும் ஒரே வாரத்தில் 100 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கில் இன்று வெளியான நிலையில் இதன் வசூல் நிலவரம் மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.  ஒரு அறிமுக ஹீரோவிற்கு முதல் படத்திலேயே 75 கோடி வசூலை ஈட்டுவது என்பது ஒரு அறிய விஷயம் என சினிமா வட்டாரங்கள் புகழ்ந்து வருகின்றனர்.


முன்னணியில் இருக்கும் நடிகர்களின் படங்களே சில சமயங்களில் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியை சந்திக்கும் சூழலில் முதல் படத்தில் வெற்றி நாயகனாக தன்னை நிரூபித்து கொண்ட பிரதீப் ரங்கநாதனுக்கு இனி வாய்ப்புகள் குவியப்போகிறது என இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.