பிரதீப் ரங்கநாதன், இவானா, சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, சூப்பர் சிங்கர் ஆஜித் ஆகியோர் நடிப்பில் நவம்பர் 4 ஆம் தேதி தியேட்டரில் வெளியான திரைப்படம் 'லவ் டுடே'. வெளியான அன்றைய தினம் முதல் தற்போது வரை பாக்ஸ் ஆபீஸில் சக்கை போடு போட்டு வரும் இந்தப்படம், அண்மையில் 50 கோடியை தாண்டியதாக தகவல் வெளியானது. 


தமிழில் இந்தப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து, லவ் டுடே படம் கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியிடப்பட்டது. தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும், நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்தப்படம் அங்கும் வசூலில் சாதனை படைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.


 






இதனிடையே, இந்தப்படம் எப்போது ஓடிடியில் வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. அந்த எதிர்பார்ப்பிற்கு பதிலளிக்கும் வகையில்  ‘லவ் டுடே’ திரைப்படம் நவம்பர் 2 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 


 






 


முன்னதாக, படத்தை பார்த்த பல பிரபலங்கள் பிரதீப் ரங்கநாதனை பாராட்டி இருந்தனர். குறிப்பாக ரசிகர்களால் சூப்பர் ஸ்டாராக பார்க்கப்படும் ரஜினிகாந்த், பிரதீப்பை நேரில் அழைத்து பாராட்டினார்.


 






இது தொடர்பான போட்டோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பிரதீப், “  “ இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும். சூரியனின் பக்கத்தில் உள்ளது போல் இதமாக இருந்தது. அழுத்தமான அரவணைப்பும், அந்த கண்களும், அந்த சிரிப்பும் , அந்த ஸ்டைலும், அன்பும் ... என்ன ஒரு மனுஷன்... சூப்பர் ஸ்டார் ரஜினி லவ் டுடே படத்தை பார்த்து என்னிடம் வாழ்த்து தெரிவித்தார். நீங்கள் கூறிய வார்த்தைகளை நான் மறக்க மாட்டேன் சார்.” என்று பதிவிட்டு இருந்தார்.  அதே போல நடிகர் சிலம்பரசனும் பிரதீப்பிற்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார்.