நாளை மறுநாள் வெளியாகவுள்ள லவ் டுடே படத்தின் சென்ஸாரில் நீக்கப்பட்ட மற்றும் மாற்றப்பட்ட காட்சிகள் தொடர்பான தகவல் வெளியாகவுள்ளது.


சென்ஸாரில் U/A சான்றிதழை பெற்ற லவ் டுடே படத்தின் சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு பிறகு, படத்தின் நீளம் 2 மணி நேரம் 34 நிமிடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாதியில் 1 மணி நேரம் 24 நிமிடகாட்சியை கொண்ட இப்படம், இடைவேளைக்கு பின் 1 மணி நேரம் 10 நிமிட நீளத்திற்கு திரையிடப்படும்.இந்த சென்ஸார் தொடர்பான தகவல் வெளியான பின்,  “என்ன பிரதீப் கட்/மியூட் லிஸ்டிற்கு அடிஷனல் ஷீட் வாங்கிருக்கீங்க” என்று கலாய்த்து வருகின்றனர்.






இப்படத்தின் குழுவினர், ப்ரோமோஷனுக்காக பல நேர்காணல்களில் கலந்து கொண்டு பயங்கர பிசியாக உள்ளனர். லவ் டுடே படத்தின் ட்ரைலர் வெளியான பின், பல இளசுகள் இப்படத்தை தியேட்டரில் சென்றுதான் பார்க்கவேண்டும் என ஒற்றை காலில் நின்றுவருகின்றனர். அதற்கு ஏற்றவாறு திரையரங்குகளில் வேகமாக புக் ஆகி வருகிறது. போகும் போக்கை பார்த்தால் ஹவுஸ் ஃபுல்லாகும் சூழ்நிலையும் ஏற்படலாம்.. இந்தவார இறுதி நாட்களில், வரிசை கட்டி நின்று லவ் டுடே படத்தை பார்த்து விட்ட பின் தான் வீடு திரும்புவார்கள் போல..!


லவ் டுடே படக்குழுவினர் :






கோமாளி படத்தின் டைரக்டரான பிரதீப் ரங்கநாதன், இந்தப்படத்தை இயக்கி ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். இவருக்கு ஜோடியாக நாச்சியார் மற்றும் ஹீரோ படத்தில் நடித்த இவானா நடித்துள்ளார். இவர்களுடன் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, சூப்பர் சிங்கர் ஆஜித் ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் வரும் பச்சை இலைய தட்டி என்ற பாடல் வைரல் ஆகி வருகிறது.


கதை கரு : 


காதல் ஜோடி இருவர், தங்களின் போனை  ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்கின்றனர். அதனால் இவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது, இருவரும் சேர்ந்தார்களா என்பதுதான் கதையாக அமைக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க : Asal Kolar: ‛பிறந்ததில் இருந்து நான் அப்படி தான்... யாரையும் தவறாக தொடவில்லை’ அசல் கோலாரின் வீடியோ பேட்டி!