இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் இயக்கி, நடித்துள்ள லவ் டுடே திரைப்படம் இன்று ரிலீசாகியுள்ள நிலையில் சமூக வலைத்தளத்தில் அப்படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். 


கோமாளி படத்தை தொடர்ந்து இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் இயக்கி, நடித்துள்ள படம் ‘லவ் டுடே’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ஹீரோயினாக இவானா நடிக்க, சத்யராஜ், ராதிகா,யோகி பாபு, சூப்பர் சிங்கர் ஆஜித் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் ஆகியவை வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இப்படம் இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. 


யுவன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ட்ரெய்லரில் இவானாவை திருமணம் செய்ய நினைக்கும் பிரதீப் அதற்காக ஹீரோயின் அப்பாவான சத்யராஜிடம் சம்மதம் கேட்கிறார். ஆனால் காதல் ஜோடி தங்களின் போனை ஒருநாள் ஒருவருக்கொருவர் மாற்றிக்கொண்டு அந்த நாளை கடந்து விட்டால் திருமணம் செய்து வைப்பதாக அவர் உறுதியளிக்கிறார். அதனால் இவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது, இருவரும் சேர்ந்தார்களா என்பதுதான் கதையாக அமைக்கப்பட்டுள்ளது. 


சென்ஸாரில் U/A சான்றிதழை பெற்ற லவ் டுடே படத்தின் சில காட்சிகள் நீக்கப்பட்டு படத்தின் நீளம் 2 மணி நேரம் 34 நிமிடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாதியில் 1 மணி நேரம் 24 நிமிடகாட்சியை கொண்ட இப்படம், இடைவேளைக்கு பின் 1 மணி நேரம் 10 நிமிடம் காட்சிகளை கொண்டது. லவ் டுடே படத்தை முதல் நாளே பார்க்க ரசிகர்கள் ஆர்வம் கொண்டிருந்த நிலையில் படத்தின் டிக்கெட் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. 


இந்நிலையில் இன்று படம் வெளியான நிலையில் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை கீழே காணலாம்.