உலகம் முழுவதும் கிரிக்கெட் தொடருக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே அளவிற்கு கால்பந்து தொடர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. 


இந்த நிலையில், உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடரானது வருகின்ற 20 ம் தேதி கத்தார் நாட்டிக் தொடங்க இருக்கிறது. 32 நாடுகள் பங்கேற்க உள்ள இந்த கால்பந்து தொடர் 28 நாட்கள் ஆசியாவில் உள்ள ஒரு நாட்டில் நடைபெற இருப்பது இதுவே முதல்முறை.  இந்த உலகக்  கோப்பை தொடரில் 32 அணிகள் பங்கேற்கும் நிலையில், இவர் மொத்தம் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, கர்த்தாரில் உள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருக்கிறது. 


இந்த சூழலில், ஃபிபா உலகக் கோப்பை தொடரில் பாலின விகிதத்தை சமநிலை படுத்தும் முயற்சியில் பெண் நடுவர்களை களமிறக்க ஃபிபா முயற்சி செய்துள்ளது. 2022 உலகக் கோப்பையில் ஆறு பெண் நடுவர்கள் இடம்பெறுவார்கள் என்றும், அவர்களில் மூன்று பேர் உதவி நடுவர்களாக இருப்பார்கள் என்றும், இது ஒரு பெரிய சர்வதேச விளையாட்டில் முதல் முறையாகும் என்று ஃபிபா தெரிவித்துள்ளது. 


உலகக் கோப்பையில் நடுவராக பங்கேற்கும் பெண் நடுவர்களின் பட்டியல் :



  • ஸ்டீபனி ஃப்ராபார்ட்: பிரான்ஸ் - நடுவர்  







  • சலிமா முகன்சங்கா: ருவாண்டா – நடுவர்







  • யோஷிமி யமஷிதா: ஜப்பான் - நடுவர்







  • நியூசா பின்: பிரேசில் - உதவி நடுவர்

  • கரேன் டயஸ் மதீனா: மெக்சிகோ - உதவி நடுவர்

  • கேத்ரின் நெஸ்பிட்: அமெரிக்கா - உதவி நடுவர்


பெண் நடுவரைத் தவிர, ஃபிபா உலகக் கோப்பை தொடரில் 32 ஆண் நடுவர்கள் பங்கேற்க இருக்கின்றனர். 


2022 கத்தார் உலகக் கோப்பையில் பங்கேற்கும் ஆண் நடுவர்களின் பட்டியல்: 



  • அப்துல்ரஹ்மான் அல் ஜாசிம் - கத்தார்

  • இவான் பார்டன் - ஸ்லோவேனியா

  • கிறிஸ் பீத் - ஆஸ்திரேலியா

  • ரபேல் கிளாஸ் - பிரேசில்

  • மேத்யூ காங்கர் - நியூசிலாந்து

  • இஸ்மாயில் எல்ஃபாத் - அமெரிக்கா

  • மரியோ எஸ்கோபார் - குவாத்தமாலா

  • அலிரேசா ஃபகானி - ஈரான்

  • பேக்கரி கஸ்ஸாமா - காம்பியா

  • முஸ்தபா கோர்பல் - அல்ஜீரியா

  • விக்டர் கோம்ஸ் - தென்னாப்பிரிக்கா

  • இஸ்ட்வான் கோவாக்ஸ் - ருமேனியா  

  • நிங் மா - சீனா

  • டேனி மக்கேலி - நெதர்லாந்து

  • சிமோன் மார்சினியாக் - போலந்து

  • அன்டோனியோ மேட்யூ - ஸ்பெயின்

  • ஆண்ட்ரெஸ் மத்தியாஸ் மாடோன்டே கப்ரேரா - உருகுவே

  • முகமது அப்துல்லா முகமது - ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

  • மகுட் என்'டியாயே - செனகல்

  • மைக்கேல் ஆலிவர் - இங்கிலாந்து

  • டேனியல் ஓர்சாடோ - இத்தாலி

  • கெவின் ஒர்டேகா - பெரு

  • சீசர் ராமோஸ் - மெக்சிகோ

  • பெர்னாண்டோ ரபாலினி - அர்ஜென்டினா  

  • வில்டன் சம்பாயோ - பிரேசில்

  • டேனியல் சீபர்ட் - ஜெர்மனி

  • ஜானி சிகாஸ்வே - ஜாம்பியா

  • ஆண்டனி டெய்லர் - இங்கிலாந்து

  • ஃபேன்குண்டோ டெல்லோ - அர்ஜென்டினா

  • கிளெமென்ட் டர்பின் - பிரான்ஸ்

  • இயேசு வலென்சுவேலா - வெனிசுலா

  • ஸ்லாவ்கோ வின்சிக் - ஸ்லோவேனியா