சின்னத்திரையில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்னும் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் மனோகர். மனோகர் என்பதை விட லொள்ளு சபா மனோகர் என்றால்தான் பலரால் அடையாளம் கண்டுக்கொள்ள முடியும். பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். குறிப்பாக சந்தானடம் காம்போவில் இவர் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். முதன் முதாலாக MRL இல் ஒப்பந்த ஊழியராக 10 வருடங்களாக கடுமையாக உழைத்தாராம் மனோகர் , ஆனால் பணிநிரந்தரம் செய்யவில்லையாம். அதன் பிறகு உயர் நீதிமன்றத்தில் குமாஸ்தாவாக சில காலம் வேலை செய்தாராம் , அந்த வேலை தனக்கு சில சட்டங்களை கற்றுக்கொடுத்தது என்கிறார்.
ஆனாலும் லொள்ளு சபா மனோகரை ரிஷி ராஜ் என்பவர் 10 லட்ச ரூபாய் பண மோசடி செய்துவிட்டாராம். படத்திற்கான ரைட்ஸ் வாங்கித்தருவதாக கூறி கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நபர் பணத்தை பெற்றுக்கொண்டு வேறு நிறுவனங்களுக்கு படத்தை கொடுத்ததாக வேதனை தெரிவிக்கிறார் மனோகர். ஆனாலும் தனக்கு சட்டம் தெரியும் என்பதால் அதனைக்கொண்டு போராடி வருவதாகவும் தெரிவிக்கிறார். தற்போது தனது பெற்றோர்கள் வசித்த பழைய வீட்டில் வசித்து வரும் மனோகர், இந்த வீட்டை நான் இடித்து கட்டவில்லை காரணம் இது எனது முன்னோர்களின் நினைவு. இந்த வீடு அவர்களின் நினைவுகளை ஏற்படுத்துவதாக இருக்கிறது.என்கிறார்.
லொள்ளு சபா மனோகர் என்றாலே , இழுத்து பேசும் , கைகளை உருட்டி பேசும் தொணியும்தான் நினைவுக்கு வரும் . அந்த அளவுக்கு தனக்கான தணி பானியை பின்பற்றி மக்களை கவர்ந்தவர். ஆரம்பத்தில் நாடக நடிகராக களமிறங்கிய போது வேறு ஸ்டைலில்தான் நடித்து வந்தாராம் மனோகர். ஆனால் விஜய் டிவியில் ஒரு பட பாடல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போதுதான் இவருக்கு இந்த ஸ்டைல் தொற்றிக்கொண்டதாம் . அதன் பிறகு லொள்ளு சபாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவே அதே ஸ்டைலை வழக்கப்படுத்திக்கொண்டாராம் லொள்ளு சபா மனோகர். அரசு வங்கி ஊழியராக பணிபுரியும் மனோகர் சிறுகதை ஒன்றையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.