புதுக்கோட்டை மண்டலம் கீரனூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் நகை இல்லாமல் முறைகேடாக உறவினர் பெயரில் ரூ.1.8 கோடி  நகை கடன் வழங்கிய கீரனூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் செயலாளர் நீலகண்டன், மேற்பார்வையாளர் சக்திவேல் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டிருந்தார்.  இந்நிலையில் வங்கியின் செயலாளராக இருந்த நீலகண்டன் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அவர் மீது எடுத்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளும், அது தொடர்பாக துறை சார்ந்து வெளியிடப்பட்ட குறிப்புகள் கீழே உள்ளது:

 

புதுக்கோட்டை மண்டலம் கீரனூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி யங்கியில் நகைக் கடல் முறைகேடு தொடர்பான சிறு குறிப்பு:

கூட்டுறவுச் சங்கங்களின் மாநில பதிவாளர் அர்களால் 31.03.2021 அன்று நிலுவையிலுள்ள கடன்களை 100% அறிவுறுத்தியதற்கிணங்க புதுக்கோட்டை மண்டலத்தில் செயல்பட்டு வரும் DRL(IT).10 கிரனூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் தஞ்சாவூர் மண்டல ஆய்வுக் குழுவின் மூலம் 100% நகைக் கடன் ஆய்வு செய்திட ஆணையிடப்பட்டு அக்குழுவினர் 07,12.2021 அன்று ஆய்வு செய்தபோது, நகைகள் இல்லாமல் கொடுத்த கடன்களின் வகைகளில் கீழ்க்கண்டவாறு நகைப் பொட்டலங்கள் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.

 

விபரம் நகை பொட்டலங்கள் எண்ணிக்கை கடன் தொகை ரூ.
பட்டியல் நகை இருப்பு 934 3,63,14,200
7.12.2021 சரிபார்த்த நகை பொட்டலங்கள் 832 2,54,96,700
இருப்பில் இல்லாத நகை பொட்டலங்கள் 102 1,08,17,500

மண்டல இணைப்பதிவாளர் அவர்களால் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மேற்படி வங்கியின் நகை பெட்டக சாவிகள் மேலாண்மை இயக்குநரால் கைப்பற்றப்பட்டது. ஆய்வு அலுவலரால் சமர்ப்பிக்கப்பட்ட பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 102 கடன்களும், வங்கியில் பணியாற்றும் பணியாளர்களது உறவினர்களின் நகைக் பெயரில் வழங்கப்பட்டவைகளா எனவும் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களின் உறவினர்கள் பெயரிலும், வழங்கப்பட்டுள்ளதா எனவும் விசாரிக்கப்பட்டு வருகிறது.


முறைகேடுகள் தொடர்பாக வங்கிச் செயலாளர் திரு.பி.நீலகண்டன் மற்றும் மேற்பார்வையாளர் திரு.என்.சக்திவேல் ஆகிய இருவரும் தற்காலிகப்பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வங்கியின் நகை மதிப்பீட்டாளர் திரு.என்.கனகவேலு வங்கியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இம்முறைகேட்டினை குற்றமுறு நோக்குடன் மேற்கொண்டுள்ளதால் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளது.

மேலும் இம்முறைகேடுகள் தொடர்பாக 1983 ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 81-இன் கீழ் விரிவான விசாரணைக்கு ஆணையிடப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக் குழுவின் முதன்மை அறிக்கையின்படி முறைகேடு செய்யப்பட்ட நகைக் கடன் தொகை ரூ 1,08.17,500-ம் மேற்படி வங்கியின் செயலாளர், மேற்பார்வையாளர் மற்றும் நகை மதிப்பிட்டாளர் ஆகியோரிடமிருந்து மொத்தத் தொகையும் தீவிர மற்றும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு முழுவதுமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

என்று அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் வங்கி செயலர் தற்கொலை செய்துள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூட்யூபில் வீடியோக்களை காண