நடிகர் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள 67வது படம் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல் ஒன்று ரசிகர்களிடையே பேசுபொருளாக உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் விஜய் பீஸ்ட் படத்திற்கு பிறகு வாரிசு படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. குடும்ப கதையாகி உருவாகி வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
ஆனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் வாரிசு படத்தை விட விஜய் நடிக்கும் 67வது படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் இணைவது உறுதியாகியுள்ள நிலையில் நாளொரு வண்ணம் படம் குறித்து புதிது புதிதாக அப்டேட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித்குமார் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும், அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் பட வேலைகளில் கவனம் கவனம் செலுத்த சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் இருந்து லோகேஷ் கனகராஜ் விலகினார். ஆனால் த்ரிஷா நடிப்பது அதிகாரப்பூர்வ தகவலாக வெளிவராத நிலையில், இது உண்மையாக இருக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். காரணம் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி ஆகிய படங்களில் ஹிட்டான நிலையில் நீண்ட ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணைய உள்ளதாக கூறப்படுவதே ஆகும்.
இந்நிலையில் த்ரிஷா இணைவதை உறுதி செய்வதாக லோகேஷ் கனகராஜ் செய்த சிறப்பான சம்பவம் ஒன்றை செய்ததாக கூறப்படுகிறது. அதாவது சமூக வலைத்தளங்களில் இருந்து விலகியதாக லோகேஷ் கூறிய அதே வேளையில் அவர் நடிகை த்ரிஷாவை ட்விட்டரின் சமீபத்தில் தான் பின்தொடர தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கண்டிப்பாக த்ரிஷா தான் விஜய்யின் அடுத்த படத்தின் ஹீரோயினாக இருப்பார் என ரசிகர்கள் அடித்து சொல்கின்றனர்.