கூலி படத்தைத் தொடர்ந்த் லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கப்போகும் கைதி 2 படத்தை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தார்கள். இப்படியான நிலையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அவர் நாயகனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. தற்போது இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

லோகேஷ் கனகராஜ் நடிக்கும் டி.சி

மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் முன்னணி கமர்சியல் இயக்குநராக வலம் வருகிறார். கைதி , விக்ரம் , மாஸ்டர் , லியோ என அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்த லோகேஷ் இயக்கத்தில் அண்மையில் கூலி படம் வெளியானது. இப்படத்திற்கு பரவலாக நெகட்டிவ் விம்சனங்கள் வரவே லோகேஷ் கனகராஜும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். அடுத்தபடியாக கைதி 2 படத்தின் படப்பிடிப்பிற்கு மும் அருண் மாதேஸ்வரன் படத்தில் அவர் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார்.  சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.  வமிகா கபி நாயகியாகவும் நடிக்கவுள்ளனர். அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார்.  இப்படத்திற்கு டி.சி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 

வசந்த் ரவி நடித்த  ராக்கி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.  சானி காகிதம் , கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கினார். தனுஷ் நடிக்கும் இளையராஜா படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது . பின் இப்படத்தின் அடுத்தகட்ட பணிகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. தற்போது லோகேஷ்ன் கனகராஜை வைத்து ரொமாண்டிக் த்ரில்லர் படத்தை இயக்கவிருக்கிறார். 

Continues below advertisement