வியாசர்பாடி பகுதியில் , ரயிலில் செல்பவர்களை குறி வைத்து சினிமா பாணியில் செல்போன் பறிப் பில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது.

Continues below advertisement

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கௌரிபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி ( வயது 40 ) இவர் பீச் ஸ்டேசன் ரயில் நிலையத்திலிருந்து திருத்தணி செல்லும் ரயிலில் சென்று கொண்டிருந்தார். 

ரயில் வியாசர்பாடி பகுதி வழியாக வரும் போது தண்டவாளத்தில் நின்றிருந்த இரண்டு பேர் ஜன்னல் ஓரமாக செல்போனில் ரீல்ஸ் பார்த்து கொண்டு இருந்த ரேவதியின் செல்போனை கம்பால் தட்டிப் பறித்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரேவதி இது குறித்து பெரம்பூர் இருப்புப் பாதை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . 

Continues below advertisement

பெரம்பூர் இருப்பு பாதை காவல் நிலைய போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து , பழைய வண்ணாரப்பேட்டை ராமதாஸ் நகர் பகுதியைச் சேர்ந்த சுந்தரேசன் ( வயது 24 )  மற்றும் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் ( வயது 32 ) என இருவரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து திருடப்பட்ட இரண்டு செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.  

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சுந்தரேசன் மற்றும் ரஞ்சித் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த பெரம்பூர் ரயில்வே இருப்பு பாதை போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த ஆட்டோவில் நாட்டு வெடி குண்டு வெடித்ததாக புரளி

சென்னை செம்பியம் பேடன் பவுல் சாலையில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த ஆட்டோவின் முன்பக்க சீட்டில் வைத்து தீபாவளிக்கு வாங்கிய மீதமுள்ள  பட்டாசை இப்போது வெடித்ததாக கூறப்படுகிறது.

அப்பொழுது வெடிச்சத்தம் கேட்டு அங்கு இருந்த மர்ம நபர் ஒருவர் உடனே காவல் கட்டுப்பாடு அறையை தொடர்பு கொண்டு ஆட்டோவில் நாட்டு வெடிகுண்டு வெடித்து விட்டதாக தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் செம்பியம் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

செல்போன் அழைப்பை எடுக்கவில்லை

விசாரணையில் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த ஆட்டோவில் அடையாளம் தெரியாத சிலர் தீபாவளிக்கு வாங்கி வெடித்த பட்டாசின் மீதியை வெடித்து விட்டு தப்பிச் சென்றது தெரிய வந்தது .

இதனையடுத்து போலீசார் ஆட்டோ எண்ணை வைத்து திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் உடைய ஆட்டோ என்பதை கண்டு பிடித்து அவரை தொடர்பு கொண்ட போது அவர் செல்போனை எடுக்கவில்லை. 

பின்னர் போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த நபரை தொடர்பு கொள்ள முயன்ற போது அவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை‌‌.  இதனையடுத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நாட்டு வெடிகுண்டு வெடித்ததாக வந்த தகவல் புரளி என தெரிய வந்தது. போலீசார் சம்பவயிடத்தை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ஆட்டோவில் பட்டாசு வெடித்த நபர்கள் குறித்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். 

பட்டாசு வெடித்ததில் ஆட்டோவின் முன்பகுதி சேதம் அடைந்துள்ளது.