லோகேஷ் கனகராஜ் மாநகரம் , கைதி மற்றும் மாஸ்டர் திரைப்படங்களின் ஹாட்ரிக்  வெற்றிக்கு பிறகு கமலை வைத்து "விக்ரம் " படம் இயக்குகிறார் , இப்படத்தில் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . தேர்தல் முடிந்த கையோட இந்தப் படத்திற்கான ஷூட்டிங் மிக விறுவிறுப்பாக தொடங்கப் பட்டுள்ளது . 




இந்நிலையில் , பிரமாண்ட திரைப்படங்களை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் தங்களுக்கு ஒரு படம் இயக்கி தருமாறு லோகேஷ் கனகராஜிடம் அட்வான்ஸ் கொடுத்ததாக சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகிது .லோகேஷ் கனகராஜின் கதை மகேஷ் பாபுவிற்கு  மிகவும் பிடித்ததால் இந்த படத்தை மகேஷ் பாபு நடிக்க கூடும் என்று கூறப்படுகிறது . படத்தை பற்றிய அதிகார பூர்வ தகவல்கள் விரைவில் வரக்கூடும் என்று எதிர்பார்க்க படுகிறது .