ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக ஆன் ஸ்க்ரீனில் நடிகர் அவதாரமெடுத்துள்ள இனிமேல்’ (Inimel Song) பாடலின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. ஸ்ருதி ஹாசன் இசையமைத்துள்ள இப்பாடலின் முழு வீடியோ வரும் மார்ச்.25ஆம் தேதி வெளியாக உள்ளது.


ரொமான்ஸில் அசத்திய லோகேஷ் கனகராஜ்! 




தமிழ் சினிமாவின் சமீபத்திய ட்ரெண்ட் செட்டர், சென்சேஷனல் இயக்குநரான லோகேஷ் கனராஜ் (Lokesh Kanagaraj),  லியோ படத்தினைத் தொடர்ந்து, தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ‘தலைவர் 171’ திரைப்படத்தினை இயக்க ஆயத்தமாக வருகிறார். இதனிடையே லோகேஷ் இப்படத்தின் ஸ்க்ரிப்ட் வேலைகளுக்காக சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்குவதாக முன்னதாகத் தெரிவித்த கையுடன் சோஷியல் மீடியாவில் இருந்து ப்ரேக் எடுத்தார்.


இதனிடையே ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் ஃபிலிம்ஸ் நிறுவனம் லோகேஷ் கனகராஜை நடிகராக அறிமுகப்படுத்துவதாக ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பினைப் பகிர்ந்தது.


அதிர்ச்சியில் ரசிகர்கள்!




ஸ்ருதிஹாசனுடன் லோகேஷ் இணைந்துள்ள இனிமேல் எனும் ஆல்பம் சாங்கின் போஸ்டரை ராஜ் கமல் நிறுவனம் ஏற்கெனவே பகிர்ந்து, 2கே கிட்ஸின் மொழியில் “இனிமே டெலுலு இஸ் த புது சொலுலு” எனப் பகிர்ந்திருந்தது. பொதுவாகவே தன் படங்களில்கூட ரொமான்ஸ் காட்சிகளுக்கு கூட பெரிதாக இடம்கொடுக்காமலும், தனக்கு ரொமான்ஸ் காட்சிகளை இயக்க வராது என்றும் பேட்டிகளில் சொல்லிய லோகேஷ், இப்படி ஸ்ருதி ஹாசனுடன் ரொமாண்டிக் பாடலில் நடிப்பதாக வெளியான அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்தது.


இந்நிலையில், தொடர்ந்து இப்பாடலுக்கு கமல்ஹாசன் வரிகள் என்றும், ஸ்ருதி ஹாசன் (Shruti Haasan) இசையமைப்பு மற்றும் பாடல் காட்சியமைப்பு என்றும், லோகேஷ் கனகராஜ் அறிமுகம் என்றும் போஸ்டர் வெளியானது.


உச்சக்கட்ட கெமிஸ்ட்ரி!


தொடர்ந்து கடந்த சில தினங்களாக இப்பாடல் பற்றிய அறிவிப்பு வெளியாகி வந்த நிலையில், தற்போது இந்தப் பாடலின் ப்ரோமோ வீடியோ காட்சி வெளியாகி லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.


ஸ்ருதி - லோகேஷ் கனகராஜின் கெமிஸ்ட்ரி படுசிறப்பாக இப்பாடலில் அமைந்துள்ள நிலையில், காதலர்களுக்கிடையேயான ஊடல், கொஞ்சல் ஆகியவை அடங்க, இப்பாடலின் ப்ரோமோ காட்சி தற்போது வெளியாகி இணையவாசிகளை வாவ் சொல்ல வைத்து வருகிறது.


 






கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்!


லோகேஷ் கனகராஜ் நடிப்பதே ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசனை மிஞ்சும் வகையில் அவரது மகள் ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து நடித்து லோகேஷ் ரொமான்ஸில் அசத்தியுள்ளது அவரது ரசிகர்களை வாயைப் பிளக்க வைத்துள்ளது.


மேலும், “பட வெளியீட்டு விழாக்களில் கூட அதிகம் பேசாத லோகேஷா இது?”,  “தன் படங்களில் தொடர்ந்து லீட் கேரக்டர்கள் அல்லது காதலர்களின் கதாபாத்திரங்களை சாகடிக்க வைத்து வரும் லோகேஷா இவர்?” என்றெல்லாம் ரசிகர்கள் அதிர்ச்சியில் இணையத்தில் ஜாலியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.