தென்னிந்திய சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா தன்னுடைய வசீகரமான தோற்றம், அழகான முகம், திறமையான நடிப்பு என அனைத்து ஆங்கிள்களிலும் ஸ்கோர் செய்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே சேர்த்தவர். ஆண் ரசிகர்கள் மட்டுமின்றி பெண் ரசிகர்களையும் கவர்ந்த சமந்தா, தென்னிந்திய மொழி படங்களில் மட்டுமல்லாமல் பாலிவுட் படங்கள், வெப் சீரிஸ் என அசத்தி வருகிறார். அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் சமந்தா. 


 



நடிகர் நாக சைதன்யா உடனான திருமண முறிவு குறித்த அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதைத் தொடர்ந்து சமந்தா மயோசிட்டிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு பல சிகிச்சைகள் மேற்கொண்ட வந்தார். சமந்தா விரைவில் உடல்நலன் தேறி வர வேண்டும் என அவரின் ரசிகர்கள் பிரார்த்தனைகளை மேற்கொண்டனர்.


சிகிச்சை மேற்கொண்டு கொஞ்சம் தேறிய சமந்தா அவர் நடித்து வந்த சாகுந்தலம் மற்றும் குஷி படங்களில் நடித்து முடித்தார். ஆனால் அப்படங்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெறத் தவறின. மீண்டும் தனது மேல் சிகிச்சைக்காக நடிப்பதில் இருந்து கொஞ்ச காலம் பிரேக் எடுத்து கொள்ளப்போவதாக அறிவிப்பை வெளியிட்டார். தற்போது சிகிச்சை முடிந்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த முடிவு எடுத்துள்ளார்.   


பிரேக்குக்கு பிறகு மீண்டும் நடிப்பில் இறங்கிய நடிகை சமந்தா முதலில் விளம்பரத்தில் இருந்து தொடங்கியுள்ளார். மேலும் சிட்டாடல் என்ற ஹாலிவுட் வெப் சீரிஸ் இந்தியப் பதிப்பில் நடிகர் வருண் தவான் ஜோடியாக நடிகை சமந்தா நடித்துள்ளார். விரைவில் இத்தொடர் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. மேலும் ஐஸ் கிரீம், கோல்ட் லோன் என பல விளம்பரங்களுக்கு நடித்து வருகிறார் சமந்தா. அந்த வகையில் நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து அவர் நடித்துள்ள கோல்டு லோன் விளம்பரம் ஒன்று சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.


 



 


நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து நடிகை ஜோதிகா 'காதல் தி கோர்' மலையாளத் திரைப்படத்தில் நடித்திருந்தார். தன் பாலின ஈர்ப்பாளராக நடித்துள்ள மம்மூட்டியின் நடிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மம்மூட்டி ஜோடியாக நடித்த ஜோதிகா அடுத்ததாக பாலிவுட் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்ததுடன் அடுத்தடுத்த வாய்ப்புகளும் அவருக்கு குவிந்து வருகிறது. 


 






 


இந்நிலையில் ஜோதிகாவைத் தொடர்ந்து அடுத்ததாக நடிகர் மம்மூட்டி ஜோடியாக எந்த நடிகை நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த  நிலையில், 72 வயதான மெகா ஸ்டார் மம்மூட்டி ஜோடியாக சமந்தா நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானது. அவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவியதை அடுத்து இந்தத் தகவல் பகிரப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அவர்கள் இருவரும் இணைந்து நடித்த இந்த கோல்ட் லோன் விளம்பரத்தையும் ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.