கூலி படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் அடுத்து எந்த படத்தை இயக்கப்போகிறார் என்கிற குழப்பமான நிலை இருகிறது. பலரும் கைதி 2 படத்தை எதிர்பார்த்த நிலையில்  ரஜினி கமலுக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் ஆனால் கதையை இரு நடிகர்களும் ரிஜெக்ட் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது தனது அடுத்த படத்தை தெலுங்கில் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னணி தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனிடம் இரும்புக்கை மாயாவி படத்தை லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளதாகவும் இந்த படம் கிட்டதட்ட முடிவு செய்யும்கட்டத்தில் இருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Continues below advertisement

சூர்யா ஆமிர் கான் தொடர்ந்து அல்லு அர்ஜூன்

இரும்புக்கை மாயாவி தனது கனவு படமாக லோகேஷ் கனகராஜ் பலமுறை கூறியுள்ளார். சைன்ஸ் ஃபிக்‌ஷன் சூப்பர் ஹீரோ படமாக இந்த படம் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த கதையில் சூர்யா நடிக்க இருந்தது. ஆனால் இருவருக்கும் கால்ஷீட் பிரச்சனை என்பதால் இந்த படம் தள்ளிப்போனது. ஒருகட்டத்திற்கு மேல் சூர்யாவுக்காக காத்திருக்காமல் லோகேஷ் ஆமிர் கானிடம் இந்த கதை சொன்னார். கூலி படத்தில் கேமியோ ரோலில் நடிக்க சம்மத்தித்ததுடன் இந்த படத்திற்கு ஓக்கே சொன்னார். ஆனால் கூலி படம் விமர்சனங்களை சந்தித்த காரணத்தினால் ஆமீர் கான் முழு திரைக்கதையை கேட்டதாகவும் இதனால் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின

அல்லு அர்ஜூடன் இணையும் லோகேஷ்

ஆமிர் கான் கதையை ரிஜெக்ட் செய்தபின் தற்போது இதே கதையை லோகேஷ் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனிடம் சொல்லி ஓக்கே வாங்க வெயிட் பண்ணுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அட்லீ இயக்கும் சூப்பர் ஹீரோ படத்தில் அல்லு அர்ஜூன் நடித்து வருவதால் இந்த படத்தைத் தொடர்ந்து மீண்டும் சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்க தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

Continues below advertisement

 நாயகனாக நடிக்கும் டிசி

இதனிடையில் அருண் மாதேஸ்வரன் இயக்கும் டிசி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். சன் பிக்ச்சர்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது. வமிகா கப்பி இப்படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு ஜோடியாக இணைகிறார். அனிருத் இசையமைக்கிறார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ரொமான்ஸ் நிறைந்த படமாக உருவாகி வருகிறது டிசி