எல்.சி.யு


திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உருவாக்கியுள்ள கதையுலகம் தான் எல்.ஸி.யு. கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் இந்த கான்செப்ட்டை லோகேஷ் அறிமுகப்படுத்தினார். அவர் முன்னதாக இயக்கிய கைதி படத்தின் கதையையும் இந்த கதை உலகிற்குள் சேர்த்துகொண்டார். கடந்த ஆண்டு வெளியான லியோ படமும் எல்.சி.யு வின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டது. தற்போது வரை கார்த்தி , சூர்யா , கமல் , ஃபகத் ஃபாசில் , விஜய் உள்ளிட்ட நடிகர்கள் எல்.சி.யு வின் அங்கமாக இருக்கிறார்கள். இனி வரக்கூடிய அடுத்தடுத்த படங்களில் இன்னும் நிறைய கதாபாத்திரங்கள் இணைய இருக்கிறார்கள். எல்.சி.யு வில் அடுத்தபடியாக கைதி 2 படத்தை மிக ஆர்வமாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்நிலையில் எல் சி யு வின்வின் அங்கமாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ள பென்ஸ் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.


ராகவா லாரன்ஸ் நடித்துள்ள பென்ஸ் திரைப்படம்


லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் மற்றும் பேஷன்  ஸ்டுடியோஸ் இணைந்து பென்ஸ் திரைப்படத்தை தயாரித்துள்ளார்கள். ராகவா லாரண்ஸ் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் கதையை  ரெமோ, சுல்தான் ஆகிய படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார்.இன்று நடிகர் ராகவா லாரன்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு பென்ஸ் படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான  விக்ரம் , லியோ படங்களைப் போலவே இந்த படத்தின் க்ளிம்ஸும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த க்ளிம்ஸ் வீடியோவில் லோகேஷ் கனகராஜே நடித்துள்ளார். ' என்னுடைய உலகத்திற்குள் உங்களை வரவேற்கிறேன் காரன்ஸ் மாஸ்டர். இந்த முறை புது கேம் புது ரூல்ஸ் மறுபடியும் ஆரம்பிக்கலாமா " என கமல் ஸ்டைடில் லோகேஷ் வசனம் பேசியுள்ளார். 


எல்.சி.யு பற்றிய குறும்படம்


எல்.சி யு வைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் வழங்கும் மாதிரியான ஒரு குறும்படமும் லோகேஷ் இயக்கியுள்ளார். 8  நிமிடம் நீளமுள்ள இந்த குறும்படம் லோகேஷ் கதையுலகைப் பற்றியும் அதில் உள்ள கதாபாத்திரங்களை பற்றியும் ஒரு அறிமுகத்தைக் கொடுக்கும். இந்த குறும்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கூலி


தற்போது லோகேஷ் கனகராஜ் ரஜினியின் கூலி படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாகர்ஜூனா , செளபின் சாஹீர் , உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் , சத்யராஜ் உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.