பிரதமரின் முத்ரா திட்டம் - கடன் வரம்பு ரூ.20 லட்சமாக உயர்வு: யார் பயன் பெறலாம்? எப்படி?

Mudra Yojana: பிரதமரின் முத்ரா திட்டத்தில் கடன் பெறும் உச்ச வரம்பானது ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Continues below advertisement

"சிறு வணிகங்களை நடத்தும் இந்த நாட்டின் கோடிக்கணக்கான சாமானிய மக்கள், முறையான நிறுவனக் கடன் பெற முடியாமல் உள்ளவர்களுக்கு நிதியளிப்பதற்காக முத்ரா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

 முத்ரா திட்டம்

2015 ஏப்ரல் 8 அன்று பிரதமரால் தொடங்கப்பட்ட பிரதமரின் முத்ரா திட்டம், கார்ப்பரேட் அல்லாத, விவசாயம் அல்லாத சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்குவதன் மூலம் அதிகாரம் அளிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. 2024 ஜூலை 23 அன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் 2024-25-ல் முத்ரா கடன் வரம்பை ரூ.20 லட்சமாக உயர்த்துவதாக நிதியமைச்சர் அறிவித்தார். இந்த புதிய வரம்பு 2024 அக்டோபர் 24 முதல் நடைமுறைக்கு வந்தது.

தருண் வகை:

இந்த அறிவிப்பு தருண் பிளஸ் என்ற புதிய கடன் வகையையும் அறிமுகப்படுத்துகிறது. இது தருண் வகையின் கீழ் முன்னர் கடன்களைப் பெற்று வெற்றிகரமாகத் திருப்பிச் செலுத்தியவர்களுக்காக  வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை கடன் பெற அனுமதிக்கிறது.

*சிஷு: ரூ.50,000/- வரையிலான கடன்களை உள்ளடக்கியது

*கிஷோர்: ரூ.50,000/- க்கு மேல் மற்றும் ரூ.5 லட்சம் வரை கடன்களை உள்ளடக்கியது

*தருண்: ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான கடன்களை உள்ளடக்கியது

*தருண் பிளஸ்: ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை கடன் உள்ளடக்கியது

முத்ரா திட்டத்தின் சாதனைகள்:

பெண்களுக்கு கடன்கள்: கடந்த நிதியாண்டில் சிஷு பிரிவின் கீழ் மொத்தம் ரூ.1,08,472.51 கோடி, கிஷோர் பிரிவின் கீழ் ரூ.1,00,370.49 கோடி, தருண் பிரிவின் கீழ் ரூ.13,454.27 கோடி வழங்கப்பட்டது.


முத்ரா செயலி:

முத்ரா மித்ரா, கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கும் மொபைல் போன் செயலியாகும்.  கடன் கோருபவர் ஒரு வங்கியாளரை அணுக இது வழிகாட்டும். இந்த செயலியில் மாதிரி கடன் விண்ணப்ப படிவங்கள் உட்பட பயனுள்ள கடன் தொடர்பான தகவல்கள் கிடைக்கும்.

பிரதமரின் முத்ரா திட்டம், இந்தியாவில் தொழில்முனைவோரது அடிப்படைச் சூழலை மாற்றியமைத்துள்ளது. இது அனைவருக்கும் நிதி சேவை என்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கடன் வரம்பு ரூ.20 லட்சமாக விரிவடைவதால், சிறு வணிகங்களை வளர்ப்பதிலும், நாட்டின் வளர்ச்சிப் பயணத்தைத் தூண்டுவதிலும் இத்திட்டம் முக்கிய பங்கு வகித்து வருகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola