விக்ரம் படம் தொடர்பாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேர்காணல்களில் சொன்ன சுவாரசியமான தகவல்களை இங்கு பார்க்கலாம்.
கைதி, மாஸ்டர் படங்கள் வெளியாகும் முன்னரே விக்ரம் படத்தில் படத்தில் கமிட் ஆனார் லோகேஷ்.
‘கைதி’ படத்தில் நடித்த தீனா விக்ரம் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருப்பதாக லோகேஷ் கூறியிருக்கிறார்.
சூர்யா 2 நாட்கள் மட்டுமே விக்ரம் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.
இந்தியன் 2 செட்டில்தான் கமலிடம் முதல் ஆட்டோகிராப்பை வாங்கியிருக்கிறார் லோகேஷ்.
விக்ரம் படத்தில் விஜய்சேதுபதிக்கு ட்ரெய்னராக இறைவியில் நடித்த பூஜா தேவரியா பணியாற்றி இருக்கிறார்.
சண்டைக்காட்சிகளில் பயன்படுத்த சிலிக்கான் கிளாஸை வரவைத்திருக்கிறார் கமல்.
விக்ரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் மீண்டும் கமலுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் அடுத்ததாக நடிகர் விஜயுடன் இணைந்து பணியாற்ற இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
படத்தை பார்த்த கமல் லோகேஷை வெகுவாக பாராட்டியிருக்கிறார்.
ஒரிஜினல் விக்ரம் படத்திற்காக கமல் யோசித்து வைத்திருந்த கேரக்டரை மையப்படுத்தி விக்ரம் படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.