L murugan Speech: முதலமைச்சர் ஸ்டாலின் பேரை சொன்னதும் அதிர்ந்த அரங்கம்.. வைரலாகும் வீடியோ..!

முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்பதாக எல்.முருகன் சொன்னதும் அரங்கத்தில் இருந்தவர்கள் ஆர்ப்பரித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்பதாக எல்.முருகன் சொன்னதும் அரங்கத்தில் இருந்தவர்கள் ஆர்ப்பரித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Continues below advertisement

 

தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைப்பதற்காக தமிழகம் வந்துள்ள நரேந்திர மோடி நேரு அரங்கத்திற்கு வந்தடைந்தார். அவரை வரவேற்கும் வகையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்புரை ஆற்றினார். அந்த வரவேற்புரையில் முதலில் பிரதமர் மோடியை வரவேற்பதாக கூறினார். அப்போது அரங்கத்தில் இருந்த பார்வையாளர்கள் மற்றும் பாஜகவினர் இன்னும் உற்சாகமாக சத்தமிட்டனர்.

தொடர்ந்து பேசிய எல்.முருகன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்கிறேன் என்றார். அப்போது அரங்கத்தில் இருந்த திமுக தொண்டர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஆக்ரோஷமாக கத்தினர். தொடர்ந்து எல்.முருகன் பேச தொடர முயன்றார். ஆனால் தொடர்ந்து தொண்டர்கள் கத்தியதால் அவரால் பேச முடியவில்லை. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

 

 

 

 

 

 

 

 

Continues below advertisement