ஃபைட் கிளப்


லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனமான ஜி ஸ்குவாட் தயாரித்துள்ள திரைப்படம் ஃபைட் கிளப் (Fight Club) . அபாஸ்.ஏ.ரஹ்மத் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மோனிஷா மோகன் மேனன், அவினாஷ் ரகுதேவன், சங்கர் தாஸ், கார்த்திகேயன் சந்தானம், சரவண வேல் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கான விநியோக உரிமைத்தை சக்தி ஃபிலிம் ஃபாக்டரியும் சாட்டலை உரிமத்தை விஜய் தொலைக்காட்சி பெற்றுள்ளது மேலும் இப்படத்திற்கான ஓடிடி உரிமத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பெற்றுள்ளது. அதீத வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றுள்ள காரணத்தினால் இப்படத்திற்கு ஏ சான்றிதல் வழங்கப் பட்டுள்ளது. 


தனிப்பட்ட ஒரு சிலரின் ஆதாயத்திற்காக மற்றும் அரசியல் சுயலாபத்திற்காக இளைஞர்களை போதைப்பழக்கத்திற்கு அறிமுகப்படுத்தி அவர்கள் எப்படி பகடைக் காயாக பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதை மையமாக வைத்து உருவான படமே ஃபைட் கிளப். ஹாலிவுட்டில் பிராட் பிட் நடிப்பில் வெளியான ஃபைட் கிளப் என்கிற படத்தின் டைட்டில் இந்தப் படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டிலுக்கு ஏற்ற வகையில் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளால் நிறைந்த படமாக ரசிகர்களை கவர்ந்துள்ளது இப்படம், ஃபைட் கிளப் திரைப்படம் வெளியாகி ஒரு வார காலம் முடிவடையும் நிலையில் தற்போது இந்தப் படத்தின் முதல் வார பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் குறித்த தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.


முதல் வார வசூல்


இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும்  வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள ஃபைட் கிளப் திரைப்படம் முதல் வாரத்தில் உலகளவில் 5.75 கோடி வசூல் ஈட்டியுள்ளது. இந்தத் தகவலை ஜி ஸ்குவாட் நிறுவனம் தங்களது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.