லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று வெளியானது. இதற்கான அறிவிப்பை லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டார். இந்தத் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் ஃபகத் பாசில் , விஜய் சேதுபதி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். 



இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி டிரெண்டானது. இந்நிலையில், விக்ரம் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. கொரோனா காரணத்தில் தாமதமான படப்பிடிப்பு, இன்று முதல் தொடங்கியுள்ளது. 






வளர்ந்துவரும் இளம் இயக்குநர்கள் பட்டியலில் தனக்கென தனியிடத்தை தக்கவைத்துக்கொண்டார் லோகேஷ். மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், தன்னுடைய யதார்த்தமான இயக்கத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் வெகு சுலபத்தில் ஈர்த்தார். மாநகரம் படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான ’கைதி’யை இயக்கினார். அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தது. பல ஆண்டுகளாக ரசிகனாக நடிகர் விஜயை ரசித்துவந்த லோகேஷ் ’மாஸ்டரை’ இயக்கி, கடந்த பொங்கலுக்கு வெளியிட்டார். இந்நிலையில் தனது திரையுலக பயணத்தில் அடுத்த மயில்கல்லாக கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கிவருகிறார். 


Vaadivasal Title Look: நாளை வெளியாகிறது சூர்யாவின் வாடிவாசல் டைட்டில் லுக்!


இந்நிலையில் தனது திரையுலக பயணத்தில் அடுத்த மயில்கல்லாக கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கிவருகிறார். தேர்தல் முடிந்த கையோடு, கமல்ஹாசன் தற்பொழுது விக்ரம் படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கிவிட்டார் என்பது தெரிந்த அப்டேட்தான். படத்தில் பகத்ஃபாசில் இணைகிறார் என்று ஒரு நிகழ்ச்சி பேட்டியில்  தெரிவித்திருந்தார் . ரசிகர்கள் இடையில் இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்தப் பரபரப்பின் தொடர்ச்சியாக விஜய் சேதுபதியும் படத்தில் இணைந்தார். மேலும் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் அங்கமாலி டைரிஸ் படத்தில் பெப்பேவாக தனது இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர், அவரும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். கொரோனா ஊரடங்கு தேர்தல் பரபரப்புக்களை அடுத்து தற்போது படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. 


TR Sundaram Birthday: தமிழில் முதல் கலர் திரைப்படம்..! மலையாளத்தில் முதல் பேசும் படம்..! தமிழில் முதல் ஹாலிவுட் கலைஞர்கள்...! - யார் இந்த டி.ஆர்.சுந்தரம்?