லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருந்த பிரபலங்கள் :


லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருந்த பிரபலங்கள் :


வளர்ந்து வரும் இளம் இயக்குனர்கள் பட்டியலில் லோகேஷ் கனகராஜிற்கு ஒரு தனி இடம் உள்ளது. மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக  தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். தன்னுடைய எதார்த்த கதைகள் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் லோகேஷ் கனகராஜ் .


அதைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் கைதி திரைப்படத்தை இயக்கினார் , திரைப்படம் அனைவரிடத்திலும் பெரிய வரவேற்பை பெற்று மிக பெரிய வெற்றியை பெற்றது. பின்பு இளயதளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் திரைப்படம் இயக்கினார், பொங்கல் அன்று திரைப்படம் வெளியாகி மக்கள் அனைவரையும் மீண்டும்  திரையரங்கிற்கு வரவழைத்தது .


தற்போது உலகநாயகன் கமல் வைத்து "விக்ரம்" திரைப்படம் இயக்கி வருகிறார். சமீபத்தில் தன்னுடைய பிறந்த நாளை இரண்டு இயக்குனர் சிகரத்துடன் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாக தொடங்கியது. இயக்குனர் மணிரத்னம் மற்றும் சங்கர் உடன் லோகேஷ் நிற்கும் புகைப்படம் அவரின் திறமையின் வளர்ச்சியை நமக்கு காட்டுகிறது லோகேஷியின் வெற்றி  வளர்ந்து வரும் அனைத்து இயக்குனர்களின் வெற்றி 


பிறந்தநாள் வாழ்த்துக்கள் லோகேஷ் .