இயக்குநர் ஏ.ஆர்.ஜீவா இயக்கத்தில் பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரன் லீட் ரோலில் நடித்துள்ள திரைப்படம் லாக் டவுன் (Lockdown).


லாக் டவுன் கால த்ரில்லர் கதை


லைகா நிறுவனம் இப்படத்தினைத் தயாரித்துள்ள நிலையில், கொரானா ஊரடங்கு சமயத்தில் ஒருவர் சந்தித்த துயரங்களை மையப்படுத்தி த்ரில்லர் ஜானரில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பிரபல திரைப்படங்களுக்கு இசையமைத்த சித்தார்த் விபின் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். கே.ஏ.சக்திவேல் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.


வெளியான முதல் சிங்கிள்


கொரோனா காலத்தில் தன் அப்பாவைக் காப்பாற்றப் போராடும் பெண்ணாக அனுபமா நடித்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனமீர்த்தது.  இந்நிலையில் லாக் டவுன் திரைப்படத்தின் முதல் பாடலான லாவா லாவா பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று மாலை வெளியாகியுள்ளது. பிரபல பாடலாசிரியர் சினேகன் இப்பாடல் வரிகளை எழுதியுள்ள நிலையில், ப்ரியா ஜெர்சன் இப்பாடலைப் பாடியுள்ளார்.


 






த்ரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் வெளியீட்டுத் தெதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அனுபமாவுக்கு கம்பேக் தருமா?


மலையாள சென்சேஷன் திரைப்படமான பிரேமம் படத்தில் 2015ஆம் ஆண்டு தன் திரைப்பயணத்தைத் தொடங்கிய அனுபமா தற்போது மலையாளம் மற்றும் தெலுங்கு திரை உலகங்களில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். சமூக வலைதளங்களில் படு ஆக்டிவ்வாக ட்ரெண்ட் செட்டராக வலம் வரும் அனுபமா, தமிழில் கொடி, சைரன் என வெகு சில படங்களிலேயே நடித்துள்ளார். இந்நிலையில் லாக் டவுன் திரைப்படம் அவருக்கு தமிழ் சினிமாவில் திருப்புமுனை சினிமாவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



மேலும் படிக்க: Actor Darshan : கொலை வழக்கில் சிக்கிய கன்னட நடிகர்..7 நாட்கள் காவல்துறை கண்காணிப்பில் வைக்க நீதிமன்றம் உத்தரவு


Pawan Kalyan Net Worth: அரசியலில் புது இன்னிங்ஸை தொடங்கிய பவன் கல்யாண்.. வியக்க வைக்கும் சொத்து மதிப்பு!