ஒவ்வொரு வாரமும் திரை ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் புதுப்புது படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 1) தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க


ஜோஷ்வா இமை போல் காக்க:


வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் ஐசரி கணேஷ் தயாரிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜோஷ்வா இமைபோல் காக்க'. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் வருண் ஹீரோவாக அறிமுகமாக அவருக்கு ஜோடியாக ராஹேய் கதாநாயகியாக நடித்துள்ளார். மன்சூர் அலிகான், விசித்ரா, திவ்யதர்ஷினி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தில் நடிகர் கிருஷ்ணா முதல்முறையாக வில்லனாக நடித்துள்ளார். பின்னணிப் பாடகர் கார்த்திக் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


 



போர் (POR):


இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் நடிகர் காளிதாஸ் ஜெயராம், அர்ஜூன் தாஸ், டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோரின் நடிப்பில் ஆக்ஷன் யூத் டிராமாவாக தமிழ் மற்றும் இந்தி என இரு மொழிகளில் நாளை வெளியாக உள்ளது POR. 


சத்தமின்றி முத்தம் தா :


ரஜிதேவ் இயக்கத்தில் நடிகர் ஸ்ரீகாந்த், பிரியங்கா திமேஷ் உள்ளிட்டோரின் நடிப்பில் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள திரைப்படம் ' சத்தமின்றி முத்தம் தா'. நடிகர் ஸ்ரீகாந்த் இதுவரையில் நடிக்காத ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார். நாளை திரையரங்கில் வெளியாகும் இப்படத்துக்கு ஜூபின் இசையமைத்துள்ளார். இது ஸ்ரீகாந்துக்கு ஒரு கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 



அதோமுகம்  :


இயக்குநர் சுனில் தேவ் இயக்கத்தில் எஸ்.பி.சித்தார்த், சைதன்யா பிரதாப், சரித்திரன்,அருண் பாண்டியன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'அதோமுகம்'.  க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் நாளை வெளியாக உள்ளது.


ஆபரேஷன் வேலண்டைன் :


ஷக்தி பிரதாப் சிங் ஹடா இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தில் நடிகர் வருண் தேஜ், மனுஷி சில்லர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் தெலுங்கு மற்றும் இந்தி என இரு மொழிகளில் நாளை வெளியாக உள்ளது. 


டூன் - பார்ட் 2 :


2021ம் ஆண்டு வெளியான முதல் பாகத்தின் தொடர்ச்சியாக டூன் பார்ட் 2 நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. டெனிஸ் வில்லெனுவ் இயக்கத்தில் திமோத்தி சலாமெட், ஜெண்டயா, ரெபேக்கா, பெர்குசன், ஜோஷ், ப்ரோலின் மற்றும் பலர் நடித்துள்ளனர். 


சாமி :


ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம், திரிஷா, விவேக் மற்றும் பலர் நடித்த நடிப்பில் 2003ம் ஆண்டு வெளியான பிளாக் பஸ்டர் சூப்பர் ஹிட் அதிரடி திரைப்படம் 'சாமி' நாளை திரையரங்குகளில் ரீ ரிலீசாக உள்ளது.