ராஜ்கமல் நிறுவனம் தயாரித்த திரைப்படங்கள் ஏதோ ஒரு வகையில் குறிப்பிடத்தகுந்த ஒரு அம்சத்தை பெற்றிருக்கின்றன. அதே சமயத்தில்  உலகநாயகன் கமலஹாசனின் பங்கு இந்தத் திரைப்படங்களில் ஏதோ ஒரு வகையில் இருந்துகொண்டு  இருப்பதை நாம் பார்க்கலாம். கமல்ஹாசனின் மேற்பார்வையில் உருவாகும் ஒரு படம் நிச்சயம் ஏதோ ஒரு வகையில் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்தத்  திரைப்படங்கள் பெரியளவில் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல்  தனக்கென ஒரு தனி ரசிகர்களை சம்பாதித்துள்ளன . ராஜ்கமல் நிறுவனத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படங்களின் வரிசையைப் பார்க்கலாம்.


ராஜ பார்வை


 1981-ஆம் ஆண்டு ராஜ்கமல் நிறுவனம்  தனது முதல் படத்தை தயாரித்தது. கமல்ஹாசன் மாதவி , ஒய்,ஜி, மகேந்திரன் ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். பார்வையற்ற ஒரு வையலனிஸ்ட் ஒரு பணக்காரப் பெண்ணைக் காதலிப்பதால் ஏற்படும் சிக்கல்களை கதையாகக் கொண்ட திரைப்படம் ராஜபார்வை.


விக்ரம்


1986 ஆம் ஆண்டு வெளியானது விக்ரம் திரைப்படம். ராஜ் கமல் நிறுவனத்தில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. கமல்ஹாசன் , சத்யராஜ் , அம்ஜத் கான், டிம்பிள் கபாடியா, அம்பிகா ஆகியவர்கள் நடித்திருந்தார்கள். இயக்குநர் ராஜசேகர் இந்தப் படத்தை இயக்கினார்.


சத்யா


1988 இல் வெளியான திரைப்படம் சத்யா. கமலஹாசன், அமலா, ராஜேஷ் நாசர் ஆகியவர்கள் நடித்திருந்தார்கள். இயக்குநர்  சுரேஷ் கிருஷ்னா இந்தப் படத்தை இயக்கினார்.


அபூர்வ சகோதரர்கள்


1989  ஆம் ஆண்டு இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கியத் திரைப்படம் அபூர்வ சகோதரர்கள். கமல் இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். கெளதமி, நாகேஷ், ஸ்ரீவித்யா, ஆகியவர்கள் நடித்திருந்தார்கள். அபூர்வ சகோதரர்கள் கமல்ஹாசன் அவர்களை ஒர்  நடிகனாக பாராட்டுக்களை பெற்றுத்தந்தத் திரைப்படம்.


தேவர் மகன்


1992 இல் கமல்ஹாசன் சிவாஜி கணேசன் இருவரும் இணைந்து நடித்த மாபெரும் வெற்றிப் படம் தேவர்மகன். இன்று வரை இளம் இயக்குநர்களுக்கு ஒரு பாடமாக இருந்து வருகிறது.  இயக்குநர் பரதன் இந்தத் திரைப்படத்தை இயக்கியுள்ளார்


சதிலீலாவதி


இயக்குநர் பாலுமகேந்திரா இயக்கத்தில் உருவான திரைப்படம் சதிலீலாவதி. கமல்ஹாசன் , கோவை சரளா ஆகியவர்கள் நடிப்பில் உருவாக நகைச்சுவைத் திரைப்படம். கமல்ஹாசன் மற்றும் கோவை சரளா ஆகிய இருவருக்கு இடையிலான கெமிஸ்ட்ரொ நன்றாக பிக்கப் ஆகியிருந்தது.


குருதிப்புனல்


1995 ஆம் ஆண்டு கமல்ஹாசன், அர்ஜுன், கெளதமி, கீதா, நாசர் ஆகியவர்கள் நடிப்பில் வெளிவந்த திரைப்படம். ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராமின் கைவண்ணத்தில் குருதிப் புனல் திரைப்படம் கமலின் சாதனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.