சூர்யா- ஜோதிகாவின் 2 D ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்து வெளியிட்டு அமெசானில் வெளியான ஜெய்பீம் இன்று அனைவரையும் அழ வைத்துக்கொண்டிருக்கிறது. செங்கேணியாக நடித்திருக்கும் லிஜோ மோல் ஜோஸ், பிரபல பத்திரிக்கை தளத்துக்கு அளித்திருக்கும் பேட்டியில், “முதல்நாள் மேக்கப் டெஸ்ட் முடிஞ்சது நான் செங்கேணியா உணரல கஷ்டமா இருந்தது, அப்புறம் எனக்கு லிஜோ மறந்துபோச்சு. நான் இதுக்கு முன்னாடி புடவையில அவ்வளவு வசதியா உணர்ந்ததில்ல. ஆனா பழங்குடியினர் புடவையிலதான் ரொம்ப வசதியா உணர்ந்தாங்க. போகப்போக நானே புடவை கட்டவும் கத்துக்கிட்டேன். பொட்டு முன்னாடி வைக்கமாட்டேன். படத்துக்காக பொட்டு, தலை வாரல்னு எல்லாத்திலும் செங்கேணியா மாறினேன்” என்று பேசியிருக்கிறார்.



தனியார் யூ ட்யூப் சேனலுக்கு மணிகண்டன் அளித்திருக்கும் பேட்டியில் சில சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். “நான் பழங்குடி மக்களோட சேர்ந்து அவங்க வாழ்க்கை பழக்கங்களை கத்துக்கிட்டேன். செங்கல் சூளைக்கு அவங்க கூட வேலைக்கு போகும்போது, அவங்க படுற கஷ்டங்களை எல்லாம் பாத்தேன். ஆயிரம் கல்லு ஒரு நாளைக்கு அடிக்கிறாங்க. அந்த வேலையை எல்லாம் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்து டான்ஸ் ஆடுறாங்க.


’நம்ம எல்லோரும் எவ்வளவு வசதிகள் கிடைச்சாலும் வாழ்க்கையை பத்தி புகாரோடவே இருக்கோம், ஆனா அவங்க எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அத காட்டிக்காம நிகழ்காலத்தை ரசிக்குறாங்க’ என்றார். நான் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவன். அதனால எனக்கு அந்த மொழி சுலபமா இருந்துச்சு. படம் பாத்துட்டு அம்மா ரெண்டு நாளா தூங்கல. அவங்களால அவங்க மகன் பிணமா நடிக்குறதை பாக்க முடியல” என்றார்.