ஷூட்டிங்கில் மைக்டைசனிடம் அடிவாங்கியது குறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா பகிர்ந்து இருக்கிறார்.
மைக்டைசனிடம் அடி வாங்கியது குறித்து பேசிய விஜய் தேவரகொண்டா, “ ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு நான் வந்து சேர்ந்த போது, என்னிடம் தயாரிப்பு குழு, மைக் டைசனின் ஷூ சைஸ் 14 ஆக இருந்ததால் அவருக்கு ஷூ கிடைக்கவில்லை என்று சொன்னது. அவரை செட்டில் பார்த்த போதுதான் தெரிந்தது, அவரது மணிக்கட்டும் பெரியது என்று.
அவரது கை, கால், கழுத்தை பார்த்த எனக்கு மிகுந்த கவலை உண்டாகிவிட்டது. ஒரு முறை ரிகர்சலின் போது, தவறுதலாக அவர் என்னை குத்தியதால் எனக்கு ஒரு நாள் முழுக்க ஒற்றைத்தலைவலி இருந்தது. நான் நாக் அவுட் ஆக விரும்பவில்லை. ஆனால் என்னுடைய உடல் தானாக கீழே விழ விரும்பியது.” என்று பேசி இருக்கிறார்.
அனன்யா பாண்டே பேசும் போது, “ அவரை பார்த்த போது மிகவும் பயந்துவிட்டேன். அவரது கை அவ்வளவு கனமாக இருந்தது. ஆனால் அவர் எங்களுடன் இனிமையாக பழகினார்.” என்று பேசினார்.
நான் அடுத்த சூப்பர் ஸ்டாரா?
சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் எப்போதும் என்னை ஈர்த்து இருக்கிறது. என்னை சூப்பர்ஸ்டார் என்று அழைக்க வேண்டும், ஸ்டாராக மாற வேண்டும் என்ற விருப்பம் எனக்கும் இருக்கிறது லைகர் பிரோமோஷனுக்கு செல்லும் எனக்கு அதிகப்படியான அன்பு எல்லாப்பக்கங்களில் இருந்தும் கிடைக்கிறது. அவர்கள் என்னை சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறார்கள். அதைக்கேட்கும் போது எனக்கு சில சமயங்களில் சங்கடமாக இருக்கும். சில வேளைகளில் இதற்கு நான் தகுதியானவன் இல்லை என்று கூட தோன்றும். இதைப்பற்றி என்னுடைய நண்பர்கள் சொல்லும் போது, ஆகஸ்ட் 25 ஆம் தேதிவரை காத்திருப்போம் என்று சொன்னேன்” என்று பேசினார்.
அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலான நடிகர் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் நடித்து வெளிவர இருக்கும் படம் ‘லிகர்’. பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகநாத் இப்படத்தை எழுதி இயக்கிவுள்ளார். இப்படத்தில் அனன்யா பாண்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய், விஷு ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.குத்துசண்டை வீரராக நடிகர் விஜய்தேவரகொண்டா நடித்துள்ள இந்த படத்தில் அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளார். இதன்மூலம் இந்திய சினிமாவில் அவர் நடிகராக அறிமுகமாகிறார்.